திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 மாணவர்களுக்கு வழங்க இலவச சைக்கிள்கள் தயாராகி வருகின்றன.
அரசு மற்றும் உதவி பெறும் மேல்நிலை பள்ளிகளில் பிளஸ் 1 பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் இலவச சைக்கிள்கள் வழங்கப்படுகின்றன. கொரோனாவால் கடந்த மார்ச் முதல் பள்ளிகள் மூடியுள்ளன. இதுவரை திறக்கப்படவில்லை. ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடக்கின்றன.இந்நிலையில் 4 கல்வி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இலவச சைக்கிள்களின் உதிரி பாகங்கள் கொண்டு வரப்பட்டன. கடந்த ஒரு வாரமாக உதிரி பாகங்களை பொருத்தும் பணியில் வடமாநிலத்தவர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். விரைவில் பிளஸ் 1 மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கப்படும் என, முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE