கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஏழை மாணவர் கல்விக் கட்டணம்:

Added : டிச 09, 2020
Share
Advertisement
சென்னை:தனியார் பள்ளியில் சேர்க்கப்படும், ஏழை, எளிய மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை, அரசு வழங்க கட்டுப்பாடு விதிக்கும் சட்டப்பிரிவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கு தொடரப்பட்டுள்ளது. மனுவுக்கு பதில் அளிக்கும்படி, தமிழக அரசுக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பஞ்சாப் அசோசியேஷன் பொதுச் செயலர் ரமேஷ் லம்பா, தாக்கல் செய்த மனு:எங்கள் சங்கத்தின் கீழ்,

சென்னை:தனியார் பள்ளியில் சேர்க்கப்படும், ஏழை, எளிய மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை, அரசு வழங்க கட்டுப்பாடு விதிக்கும் சட்டப்பிரிவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மனுவுக்கு பதில் அளிக்கும்படி, தமிழக அரசுக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பஞ்சாப் அசோசியேஷன் பொதுச் செயலர் ரமேஷ் லம்பா, தாக்கல் செய்த மனு:எங்கள் சங்கத்தின் கீழ், சென்னையில் நான்கு மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயங்குகின்றன. கட்டாய கல்வி சட்டத்தின் படி, தனியார் பள்ளிகளில், 25 சதவீதம் ஏழை, எளிய மாணவர்களை சேர்க்க வேண்டும். அவர்களுக்கான செலவை, அரசு வழங்க வேண்டும்.

அதாவது, அரசு பள்ளியில் ஒரு மாணவனுக்கு ஆகும் செலவு அல்லது அரசு பள்ளி மாணவனிடம் வசூலிக்கும் கட்டணம், இதில் எது குறைவோ, அந்த தொகையே, தனியார் பள்ளிகளுக்கு அரசு வழங்கும். இத்தகைய கட்டுப்பாடு, சட்டத்தில் உள்ளது.எங்கள் பள்ளிகளில், 25 சதவீத ஒதுக்கீட்டில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு, கட்டண நிர்ணய குழு நிர்ணயிக்கும் கட்டணத்தை வழங்கும்படி, கேட்டு வருகிறோம்.

ஆனால், குறிப்பிட்ட தொகை மட்டுமே வழங்கப்படுகிறது.தனியார் பள்ளிகள் வசூலிக்க வேண்டிய கட்டணத்தை நிர்ணயித்து விட்டு, அரசு உத்தரவின்படி சேர்க்கப்படும் மாணவர்களுக்கு, மிகவும் குறைவான கட்டணத்தை, பள்ளிகளுக்கு வழங்க முடியாது.எனவே, கட்டாய கல்வி சட்டத்தில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு, நியாயமானதாக இல்லை. அந்த சட்டப்பிரிவை ரத்து செய்ய வேண்டும்.

விசாரணை முடியும் வரை, சட்டப் பிரிவுக்கு தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதிகள் ஆர்.சுப்பையா, சரவணன் அடங்கிய அமர்வில், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் அபிஷேக் ஆஜரானார். மனுவுக்கு பதில் அளிக்க, மத்திய, மாநில அரசுகளுக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X