கொரோனாவை கட்டுப்படுத்த டிச.31 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.சில மாதங்களுக்கு முன் வரை ராமநாதபுரம் மாவட்டத்தில் பல இடங்களில் கொரோனா தொற்று தீவிரமாக பரவியது.
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தினசரி பாதிப்பு ஒற்றை இலக்கத்தில் உள்ளது.மாவட்டத்தில் நேற்று வரை 6244 பேருக்கு தொற்று ஏற்பட்டுஉள்ளது. இதில் 6074 பேர் குணமடைந்தனர். 131 பேர் பலியாகினர். 39 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளதால் மாநில அளவில் பாதிப்பு குறைந்த மாவட்டங்களில் மூன்றாவது இடத்தை ராமநாதபுரம் பெற்றுள்ளது. பெரம்பலுார் மாவட்டம் 4 பேருடன் முதலிடத்திலும், அரியலுார் 26 பேருடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது.தொடர்ந்து தொற்று பாதிப்பும் மூன்று, நான்கு என உள்ளதால் விரைவில் ராமநாதபுரம் மாவட்டம் கொரோனா முற்றிலும் ஒழிக்கப்பட்ட மாவட்டமாகமாற்றப்படும், என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், கொரோனா சிகிச்சைக்கு ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவ மனையில் மட்டும் வார்டு செயல்படவும், பிற இடங்களில் ஏற்படுத்தப்பட்ட சிறப்பு வார்டுகளை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE