முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே கஞ்சா வைத்திருந்த 6 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து வாளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
முதுகுளத்துார்-பரமக்குடி சாலை ஆற்றுப்பாலம் அருகே டி.எஸ்.பி., ராகவேந்திரா கே.ரவி, இன்ஸ்பெக்டர் மோகன் வாகன சோதனையில் ஈடுபட்டுஇருந்தனர். கிழத்துாவலை சேர்ந்த பாஸ்கரசேதுபதி 19, நாகமுனீஸ்வரன் 19, 2 பேரும் கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. 2 பேரையும் கைது செய்து 2 கிலோ 800 கிராம் கஞ்சா பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் காரைக்குடி அருகே பாண்டிகோயிலை சேர்ந்த ஜெயகுமார் வீட்டில் சோதனை செய்தபோது பதுக்கி வைத்திருந்த 23 கிலோ 700 கிராம் கஞ்சா, 3 வாள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.முதுகுளத்துார் இன்ஸ்பெக்டர் மோகன், பாஸ்கரசேதுபதி 19, நாகமுனீஸ்வரன் 19,ஜெயகுமார் 27, ராதாகிருஷ்ணன் 20, வில்வநாதன் 23, முத்துபாண்டி 23, ஆகிய 6 பேரை கைது செய்தார். இவர்களிடம்இருந்து 26 கிலோ 500 கிராம் கஞ்சா, 3 வாளை போலீஸ் பறிமுதல் செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE