ராமநாதபுரம் : ராமநாதபுரம் பெரியகண்மாயில் வைகை அணைத் தண்ணீர் வருகை, தொடர் மழை காரணமாக தற்போது 3.6 அடி அதாவது 200மி.கன அடி தண்ணீர் உள்ளது. நேற்று மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் களஆய்வு செய்தார்.
அப்போது தண்ணீரை வீணாகாமல் உரிய பாசனக்கால்வாய் வழியாக ராமநாதபுரம் நகரில் உள்ள ஊரணிகளில் சேமிக்க ஏதுவாக நீர்வழித் தடத்தில் தடையில்லாமல் இருப்பதை உறுதி செய்திட வேண்டும். நகராட்சிக்குட்பட்ட நீலகண்டி ஊரணி, லட்சுமிபுரம் ஊரணி, சூரன்கோட்டை இடையர் வலசை ஊரணி ஆகிய இடங்களில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்தார். நகரில் குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்திருந்த மழைநீரை நீர்நிலைகளில் சேமிக்க கலெக்டர் அறிவுறுத்தினார். சூரன்கோட்டை பகுதியில் ரேஷன் கடையில் வழங்கப்படும் பொருட்கள் தரத்தை ஆய்வு செய்தார்.
பெரிகருப்பன் நகரில் புதிய வாக்காளர்களிடம் விண்ணப்பங்களை பெற்றார். சப்கலெக்டர் சுகபுத்ரா, நகராட்சி கமிஷனர் விஸ்வநாதன், தாசில்தார் முருகவேல் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர்சிவராம கிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE