கொடைக்கானல் : மலைப்பகுதியில் விவசாயத்தை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்ல விவசாயிகள் ஆர்.டி.ஓ., சிவகுருபிரபாகரனிடம்மனு அளித்தனர்.
மேல்மலை கிராமங்களான மன்னவனுார், பூண்டி, போளுர் கிராமங்களில் ஏராளமான ஏக்கரில் உருளைக்கிழங்கு, கேரட், பூண்டு, பீன்ஸ், முட்டைகோஸ் சாகுபடி செய்கின்றனர். மலைப்பகுதியில் பெருகி சாகுபடியை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த வழிதெரியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர். இதையடுத்து ஆர்.டி.ஓ.,விடம் அளித்த மனு: வனவிலங்குகளால் ஏற்படும் சேதத்திற்கு இழப்பீடு கோரியும் நடவடிக்கை இல்லை. இதையடுத்து அனைத்து விவசாயிகளும்கேரளா மாநிலம் போன்று காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்ல அனுமதிக்க வேண்டும், வனத்துறையினர் தங்களது விலங்குகளை காட்டுக்குள் வைக்க வேலி அமைத்தல், இழப்பீடு வழங்க வேண்டும்.
கிருஷ்ணகிரி, ராஜபாளையத்தில்அமல்படுத்தியுள்ள காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்தும் சட்டத்தை திண்டுக்கல் மாவட்டத்திற்கும் நீட்டிக்க வேண்டும் என கூறியுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE