அ.தி.மு.க., தி.மு.க., மீது வழக்கு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., தி.மு.க., மீது வழக்கு

Added : டிச 09, 2020
Share
ராமநாதபுரம் : ராமநாதபுரம் அரண்மனை சந்திப்பில் மோதலில்ஈடுபட்ட அ.தி.மு.க., தி.மு.க.,வினர் மீது பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக ஒரு வழக்கும், தி.மு.க., துணை பொதுச்செயலாளர் ராசா உருவ பொம்மை எரித்ததாக அ.தி.மு.க.,வினர் மீது மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ., குறித்து தி.மு.க., துணை பொதுச்செயலாளர் அவதுாறாக பேசியதை கண்டித்து ராமநாதபுரம் அரண்மனை

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அரண்மனை சந்திப்பில் மோதலில்ஈடுபட்ட அ.தி.மு.க., தி.மு.க.,வினர் மீது பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக ஒரு வழக்கும், தி.மு.க., துணை பொதுச்செயலாளர் ராசா உருவ பொம்மை எரித்ததாக அ.தி.மு.க.,வினர் மீது மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ., குறித்து தி.மு.க., துணை பொதுச்செயலாளர் அவதுாறாக பேசியதை கண்டித்து ராமநாதபுரம் அரண்மனை சந்திப்பில் ராசா உருவப்பொம்மையை அ.தி.மு.க.,வினர் எரித்தனர்.இதுதொடர்பாக ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் சேது பாலசிங்கம், எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி செயலாளர் நாகநாத சேதுபதி, மாணவர் அணி செயலாளர் செந்தில்குமார், மகளிர் அணி செயலாளர் ஜெய்லானி, முன்னாள் நகராட்சி கவுன்சிலர்கள் வரதன், நாகஜோதி, ராம்குமார், சீனிவாசன் ஆகிய எட்டு பேர் மீது பஜார் போலீசார் வழக்கு பதிந்தனர்.

மேலும், மோதல் தொடர்பாக பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தியதாக அ.தி.மு.க.,வில் அதே எட்டு பேர் மீதும், தி.மு.க.,வில் நகர் செயலாளர் கார்மேகம், ஒன்றிய செயலாளர் பிரபாகரன், கார்த்திக், பி.டி.ராஜா, காளிதாஸ், வீரசேகரன், அப்பாஸ்கனி, லிங்கம், வீரசேகர், துரை ஆகிய 10 பேர் மீதும் வழக்கு பதிந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X