பொது செய்தி

தமிழ்நாடு

மாடுகளுக்கு வசூல் வேட்டை

Added : டிச 09, 2020
Share
Advertisement
தாண்டிக்குடி : தாண்டிக்குடி பூலத்துாரில் கால்நடைத்துறை மூலம் வழங்கும் இலவச மாடு வழங்கும் திட்டத்தில் இடைத்தரகர்கள் வசூல் வேட்டை செய்வதாக புகார் எழுந்துள்ளது. கால்நடை பராமரிப்புத்துறை மூலம் பூலத்துார் ஊராட்சியில் 50 நபர்களுக்கு இலவச மாடு வழங்கப்படுகிறது. இதற்காக சில மாதங்களாக பயனாளிகள் தேர்வு நடந்தது. இதில் ஊராட்சி நிர்வாகம் இடைத்தரகர் நியமித்து பயனாளிகள்

தாண்டிக்குடி : தாண்டிக்குடி பூலத்துாரில் கால்நடைத்துறை மூலம் வழங்கும் இலவச மாடு வழங்கும் திட்டத்தில் இடைத்தரகர்கள் வசூல் வேட்டை செய்வதாக புகார் எழுந்துள்ளது.

கால்நடை பராமரிப்புத்துறை மூலம் பூலத்துார் ஊராட்சியில் 50 நபர்களுக்கு இலவச மாடு வழங்கப்படுகிறது. இதற்காக சில மாதங்களாக பயனாளிகள் தேர்வு நடந்தது. இதில் ஊராட்சி நிர்வாகம் இடைத்தரகர் நியமித்து பயனாளிகள் தேர்வுக்கு ரூ. 5 ஆயிரம் தேவை என நிர்பந்திப்பதாகவும், தரமறுப்போர் பயனாளிகள் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.கால்நடைத்துறையும் இதனை கண்டுகொள்ளாமல் உள்ளது.

மாவட்ட நிர்வாகம் தலையிட வேண்டும் என சம்பந்தப்பட்டோர் குமுறுகின்றனர். கால்நடைத் துறை உதவி இயக்குனர் பிரபு கூறுகையில், ''இலவச மாடு வழங்கும் திட்டத்தில் புகார்கள் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். மற்றபடி அரசு வழிகாட்டுதல்படி முறையாக வழங்கப்படும்'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X