சென்னை:தமிழகத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில், 10 ஆயிரத்து, 491 பேர் மட்டுமே, தற்போது சிகிச்சையில் உள்ளனர்.
இதுகுறித்து, சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:மாநிலத்தில் உள்ள, 228 கொரோனா பரிசோதனை ஆய்வகங்களில், நேற்று மட்டும், 70 ஆயிரத்து, 262 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அதில், சென்னையில், 347 பேர்; கோவையில், 133 பேர்; செங்கல்பட்டில், 78 பேர் என, 1,217 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதோடு, வெளி மாநிலங்களில் இருந்து வந்த, 15 பேருக்கும், தொற்று பாதிப்பு உள்ளது.
இதுவரை, 1.26 கோடி மாதிரிகள் பரிசோதனையில், ஏழு லட்சத்து, 94 ஆயிரத்து, 20 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.சிகிச்சை பெறுபவர்களில், 1,315 பேர், நேற்று குணமடைந்தனர். இவர்களுடன் சேர்த்து, ஏழு லட்சத்து, 71 ஆயிரத்து, 693 பேர், இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.
தற்போது, சென்னையில், 3,236 பேர்; கோவையில், 924 பேர் என, 10 ஆயிரத்து, 491 பேர் சிகிச்சையில் உள்ளனர்.சில தினங்களில் இறந்தவர்களில், சென்னையில், எட்டு பேர் உட்பட, 14 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுடன் சேர்த்து, 11 ஆயிரத்து, 836 பேர் இறந்துள்ளனர். அதிகபட்சமாக சென்னையில், 3,893 பேர் இறந்துள்ளனர்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE