சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கிணற்றுக்குள் விழுந்து சிறுத்தை; குரங்கு உயிரிழப்பு

Added : டிச 10, 2020
Share
Advertisement
கோத்தகிரி : கீழ் கோத்தகிரி அருகே, கிணற்றில் விழுந்த சிறுத்தை மற்றும் குரங்கு இறந்தது தொடர்பாக, வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.நீலகிரி வனக்கோட்டம், கோத்தகிரி வனச்சரகம், பொம்மன் தனியார் தேயிலை தோட்டத்தில் மூடப்படாத கிணறு உள்ளது. இந்த கிணற்றில், நேற்று காலை, சிறுத்தை; குரங்கு இறந்த கிடப்பதை சிலர் பார்த்துள்ளனர்.தகவல் அறிந்த, கோத்தகிரி ரேஞ்சர் செல்வகுமார்
 கிணற்றுக்குள் விழுந்து சிறுத்தை; குரங்கு உயிரிழப்பு

கோத்தகிரி : கீழ் கோத்தகிரி அருகே, கிணற்றில் விழுந்த சிறுத்தை மற்றும் குரங்கு இறந்தது தொடர்பாக, வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீலகிரி வனக்கோட்டம், கோத்தகிரி வனச்சரகம், பொம்மன் தனியார் தேயிலை தோட்டத்தில் மூடப்படாத கிணறு உள்ளது. இந்த கிணற்றில், நேற்று காலை, சிறுத்தை; குரங்கு இறந்த கிடப்பதை சிலர் பார்த்துள்ளனர்.தகவல் அறிந்த, கோத்தகிரி ரேஞ்சர் செல்வகுமார் தலைமையில், வனவர் சக்திவேல், வனக்காப்பாளர் வீரமணி உட்பட வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு நடத்தினர்.

தொடர்ந்து, வனத்துறையினர் கிணற்றுக்குள் இறங்கி, வலை உதவியுடன், சிறுத்தை மற்றும் குரங்கை மேலே கொண்டு வந்தனர். கால்நடை மருத்துவர் ராஜன் பிரேத பரிசோதனை செய்த பின், சிறுத்தை அதே இடத்தில் எரியூட்டப்பட்டது. குரங்கு, அதே இடத்தில் புதைக்கப்பட்டது. விசாரணை நடந்து வருகிறது.

வனத்துறையினர் கூறுகையில்,'தனியார் எஸ்டேட்டில், மூன்று வயதுடைய பெண் சிறுத்தை, குரங்கை துரத்தி சென்ற போது, கிணற்றுக்குள் குரங்குடன் தவறி விழுந்து இறந்துள்ளது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X