பொது செய்தி

தமிழ்நாடு

9 நாட்களுக்கு பின் மீன்வரத்து பாம்பன் மீனவர்கள் மகிழ்ச்சி

Added : டிச 10, 2020
Share
Advertisement
ராமேஸ்வரம் : புரெவி புயலால் 9 நாட்களுக்கு பின் பாம்பனில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களுக்கு அதிக மீன்வரத்து கிடைத்ததால், மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.புரெவி புயலால் நவ.,29 முதல் ராமேஸ்வரம், பாம்பன் மீனவர்களுக்கு மீன்துறையினர் தடைவிதித்தனர். இதனால்ராமேஸ்வரம் பகுதியில் 2 ஆயிரம் விசை, நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல், வீடுகளில் முடங்கினர்.

ராமேஸ்வரம் : புரெவி புயலால் 9 நாட்களுக்கு பின் பாம்பனில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களுக்கு அதிக மீன்வரத்து கிடைத்ததால், மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.புரெவி புயலால் நவ.,29 முதல் ராமேஸ்வரம், பாம்பன் மீனவர்களுக்கு மீன்துறையினர் தடைவிதித்தனர்.

இதனால்ராமேஸ்வரம் பகுதியில் 2 ஆயிரம் விசை, நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல், வீடுகளில் முடங்கினர். இப்பகுதியில் மீன்வரத்து இன்றி மீன் விலை உயர்ந்தது.புயல் வலுவிழந்ததும் 9 நாட்களுக்கு பின் டிச.,8ல் பாம்பனில் இருந்து 90 விசைப்படகில் மீனவர்கள்மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் மீன்பிடித்து நேற்று கரை திரும்பினர்.இதில் பெரும்பாலானபடகில் வெளமீன், மாஊழா, நகரை உள்ளிட்ட மீன்கள் அதிகம் சிக்கியது.

இதனை பாம்பன்மீன் வியாபாரிகள் ஆர்வமுடன் வாங்கி ஐஸ்சில் பதப்படுத்தி கேரளா, கோவை மீன் மார்க்கெட்டுக்கு அனுப்பினர். 9 நாட்களுக்கு பின் அதிக மீன்கள் சிக்கியதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X