உடுமலை : பாலக்காட்டிலிருந்து சென்னை செல்லும் ரயில், சிறப்பு சேவையாக, உடுமலை வழிதடத்தில் நேற்று முதல் துவங்கியது.
கொரோனா பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. இதன் அடிப்படையில், உடுமலை, பொள்ளாச்சி வழிதடத்தில் இயக்கப்பட்ட ரயில் சேவைகளும் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டன.பாதிப்புகள் குறைந்து வருவதையொட்டி, இச்சேவை மீண்டும் ஒவ்வொரு நிலையாக இயக்கப்பட்டு வருகிறது. சென்னையிலிருந்து பாலக்காடு செல்லும் சிறப்பு ரயில் நேற்று முதல் துவக்கப்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து இரவு, 9.40 மணிக்கு புறப்பட்டு, காலை, 8:03 மணிக்கு உடுமலை, 8:47 மணிக்கு பொள்ளாச்சி, 10:10 மணிக்கு பாலக்காடு சென்றடைகிறது. பாலக்காட்டில் மதியம், 3:35 மணிக்கு துவங்கி, மாலை, 4:37 மணிக்கு பொள்ளாச்சி, 5:08 மணிக்கு உடுமலை, 5:55 மணிக்கு பழநி வழியாக, சென்னைக்கு, அதிகாலை, 5:35 மணிக்கு செல்கிறது.இந்த சேவையை பயன்படுத்த விரும்பும் பயணிகள், முன்பதிவு மட்டுமே செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாலக்காட்டிலிருந்து, துவக்கப்படுவதற்கு அரைமணிநேரம் முன்பு வரை, முன்பதிவு செய்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், முதியவர்களுக்கான வயது வரம்பு சலுகை முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், மதுரை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE