பொது செய்தி

தமிழ்நாடு

காட்சிப்பொருளான வாரச்சந்தை திறந்தும் தீராத வேதனை; திறப்பு விழா முடிந்தும் தீராத வேதனை

Added : டிச 10, 2020
Share
Advertisement
உடுமலை : திறப்பு விழா முடிந்தும் காட்சிப்பொருளாக உள்ள, வாரச்சந்தையை செயல்பாட்டுக்கு கொண்டு வர, குடிமங்கலம் ஒன்றிய மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.குடிமங்கலம் ஒன்றியம், சோமவாரப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட, பெதப்பம்பட்டியில், தற்காலிகமாக வாரச்சந்தை செயல்பட்டு வந்தது. நீண்ட கால கோரிக்கைக்குப்பிறகு, வாரச்சந்தை கடைகளுக்கு, செஞ்சேரிமலை ரோட்டில், இடம் தேர்வு செய்யப்பட்டு,

உடுமலை : திறப்பு விழா முடிந்தும் காட்சிப்பொருளாக உள்ள, வாரச்சந்தையை செயல்பாட்டுக்கு கொண்டு வர, குடிமங்கலம் ஒன்றிய மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

குடிமங்கலம் ஒன்றியம், சோமவாரப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட, பெதப்பம்பட்டியில், தற்காலிகமாக வாரச்சந்தை செயல்பட்டு வந்தது. நீண்ட கால கோரிக்கைக்குப்பிறகு, வாரச்சந்தை கடைகளுக்கு, செஞ்சேரிமலை ரோட்டில், இடம் தேர்வு செய்யப்பட்டு, நிரந்தர கட்டடம் கட்ட, 40 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.கட்டுமான பணிகள் நிறைவு பெற்று, கடந்த, ஜூலை மாதத்தில், கால்நடைத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் தலைமையில், வாரச்சந்தை திறப்பு விழா நடந்தது. ஆனால், இதுவரை சந்தை பயன்பாட்டுக்கு வராமல், காட்சிப்பொருளாக உள்ளது.

அப்பகுதி மக்கள் கூறியதாவது: நீண்ட கால கோரிக்கை நிறைவேறியும், பயன்பாட்டுக்கு திறக்கப்படாமல், வாரச்சந்தை பூட்டியே கிடப்பது வேதனையளிக்கிறது. சந்தையில், இயற்கை வேளாண் முறையில், காய்கறி விற்பனை செய்பவர்களுக்கு, தனியிடம் ஒதுக்குதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கு சமர்ப்பித்துள்ளோம்.ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. விரைவில், சந்தையை திறக்க குடிமங்கலம் ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X