பொது செய்தி

தமிழ்நாடு

பி.ஏ.பி., பாசன நீர் பங்கீட்டில் பிரச்னை! உயர் மட்ட குழு அமைக்க பரிந்துரை

Added : டிச 10, 2020
Share
Advertisement
பொள்ளாச்சி : பி.ஏ.பி., பாசனத்தில் உள்ள நீர் பங்கீடு உள்ளிட்ட பிரச்னைகளை களைய உயர்மட்ட குழு அமைக்க அரசுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர்.கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நிலங்கள் பாசனம் பெறும் வகையில், பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன திட்டம் (பி.ஏ.பி.,) செயல்படுத்தப்படுகிறது.ஆழியாறு அணையில் பழைய ஆயக்கட்டு, புதிய ஆயக்கட்டு என மொத்தம், 50,880 ஏக்கர்

பொள்ளாச்சி : பி.ஏ.பி., பாசனத்தில் உள்ள நீர் பங்கீடு உள்ளிட்ட பிரச்னைகளை களைய உயர்மட்ட குழு அமைக்க அரசுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர்.

கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நிலங்கள் பாசனம் பெறும் வகையில், பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன திட்டம் (பி.ஏ.பி.,) செயல்படுத்தப்படுகிறது.ஆழியாறு அணையில் பழைய ஆயக்கட்டு, புதிய ஆயக்கட்டு என மொத்தம், 50,880 ஏக்கர் நிலங்கள்; கேரளாவுக்கு ஒப்பந்தப்படி நீர் வினியோகம், குடிநீர் திட்டங்களுக்கும் நீர் வழங்கப்படுகிறது.

இதேபோன்று, திருமூர்த்தி அணையில் இருந்து, 3.77 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு நான்கு மண்டலமாக பாசனம்; குடிநீர் திட்டங்களும், ஏழு குள பாசனத்துக்கும் தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது.இந்நிலையில், ஆழியாறு - திருமூர்த்தி பாசன விவசாயிகள் இடையே நீர் பங்கீடு செய்வதில் பிரச்னை, உப்பாறுக்கு தண்ணீர் திறப்பது என, பல்வேறு பிரச்னைகள் சமீப காலமாக எழுந்து வருகிறது. இதனை தவிர்க்க உயர் மட்ட குழு அமைக்க அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:பி.ஏ.பி., பாசனத்தில், விவசாயிகளிடையே நீர் பங்கீட்டு பிரச்னை, முறையற்ற வகையில் பாசன நீர் எடுப்பது, ஒரு மடை விட்டு ஒரு மடை பாசனம் செயல்படுத்துவது குறித்து மறு ஆய்வு செய்தல் உள்ளிட்ட பணிகளுக்காக உயர் மட்ட குழு அமைக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. இதற்காக, திட்டத்தில் அனுபவம் உள்ள, ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள், தற்போது பணியில் உள்ள பொதுப்பணித்துறை அதிகாரிகள், வேளாண் பல்கலைக்கழக அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த குழு வாயிலாக, நீர் பங்கீடு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு உரிய தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இந்த குழு அமைப்பதற்காக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம். அரசு அனுமதி கிடைத்ததும் குழு அமைக்கப்படும். இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X