சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் பிளாஸ்டிக் 'ரெய்டு' 'மாஸ்க்' அணியாதோருக்கு அபராதம்

Added : டிச 10, 2020
Share
Advertisement
ஆனைமலை : ஆனைமலை பேரூராட்சி பகுதிகளில் அதிகாரிகள் பிளாஸ்டிக் ரெய்டு சென்றதுடன், முகக்கவசம் அணியாதோருக்கு அபராதம் விதித்தனர்.ஆனைமலை பேரூராட்சிக்கு உட்பட்ட முக்கோணம், மாசாணியம்மன் கோவில் பகுதிகளில், ஏராளமான வணிக கடைகள், ஓட்டல்கள் உள்ளன. இவற்றில், அரசு தடை செய்துள்ள, பிளாஸ்டிக் கவர்கள், டம்ளர்கள் பயன்படுத்துவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இந்நிலையில்,

ஆனைமலை : ஆனைமலை பேரூராட்சி பகுதிகளில் அதிகாரிகள் பிளாஸ்டிக் ரெய்டு சென்றதுடன், முகக்கவசம் அணியாதோருக்கு அபராதம் விதித்தனர்.

ஆனைமலை பேரூராட்சிக்கு உட்பட்ட முக்கோணம், மாசாணியம்மன் கோவில் பகுதிகளில், ஏராளமான வணிக கடைகள், ஓட்டல்கள் உள்ளன. இவற்றில், அரசு தடை செய்துள்ள, பிளாஸ்டிக் கவர்கள், டம்ளர்கள் பயன்படுத்துவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இந்நிலையில், பேரூராட்சி செயல் அலுவலர் உமாராணி தலைமையிலான அதிகாரிகள், முக்கோணம் பகுதியில், நேற்று பிளாஸ்டிக் 'ரெய்டு' சென்றனர். இதில், மூன்று ஓட்டல்கள் மற்றும் கடைகளில், 12 கிலோ பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல் செய்தனர். அக்கடைகளுக்கு அபராதம் விதித்தனர். அதேபோல், முக்கோணம் பகுதியில் முகக்கவசம் அணியாத, 21 பேருக்கு அபராதம் விதித்தனர்.

அதிகாரிகள் கூறியதாவது:கடந்த, ஐந்து மாதங்களில், 51 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்து, 15 ஆயிரம் ரூபாய் வரையில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், முகக்கவசம் அணியாதோருக்கு மொத்தம், 95,700 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.மக்கள் வெளியில் வரும் போது, கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். கடைகளில் சமூக இடைவெளி பின்பற்றாமல் அதிக கூட்டமாக இருந்தாலும் அபராதம் விதிக்கப்படும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் தொடர்ந்து பயன்படுத்தினால், கடையின் உரிமம் ரத்து செய்யப்படும்.இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X