பொது செய்தி

தமிழ்நாடு

வடக்கிபாளையத்தில் கொப்பரை ஏலம்

Added : டிச 10, 2020
Share
Advertisement
பொள்ளாச்சி : பொள்ளாச்சி, வடக்கிபாளையம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், கொப்பரை ஏலம் நடந்தது. விற்பனைக்கூட கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமை வகித்தார்.ஏலத்துக்கு, சுற்றுப்பகுதி கிராமங்களில் இருந்து, 22 மூட்டைகளில் கொப்பரை வரத்து இருந்தது. முதல்தர கொப்பரை, 10 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் கிலோவுக்கு, 109.77 முதல், 120.77 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.இரண்டாம் தர கொப்பரை, 12

பொள்ளாச்சி : பொள்ளாச்சி, வடக்கிபாளையம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், கொப்பரை ஏலம் நடந்தது. விற்பனைக்கூட கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமை வகித்தார்.

ஏலத்துக்கு, சுற்றுப்பகுதி கிராமங்களில் இருந்து, 22 மூட்டைகளில் கொப்பரை வரத்து இருந்தது. முதல்தர கொப்பரை, 10 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் கிலோவுக்கு, 109.77 முதல், 120.77 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.இரண்டாம் தர கொப்பரை, 12 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் கிலோவுக்கு, 60.77 முதல், 82.65 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. ஏலத்தில், 10 விவசாயிகள், ஆறு வியாபாரிகள் பங்கேற்றனர்.கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், இந்த வாரம் கொப்பரை கிலோவுக்கு, 9.23 ரூபாய் விலை சரிவு ஏற்பட்டது. தொடர் மழை மற்றும் ஈரப்பதமான காற்று காரணமாக, கொப்பரை உற்பத்தியும், தரமும் பாதித்ததால், விலை சரிவு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X