பாதுகாப்பான அங்கன்வாடி உறுதிப்படுத்த அறிவுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பாதுகாப்பான அங்கன்வாடி உறுதிப்படுத்த அறிவுறுத்தல்

Added : டிச 10, 2020
Share
உடுமலை : உடுமலையில், அங்கன்வாடி மையங்கள் பாதுகாப்பான நிலையில் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ள, பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.உடுமலையில், 143, குடிமங்கலத்தில், 75 மற்றும் மடத்துக்குளத்தில், 77 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. பருவமழை தீவிரமடைந்து வருவதால், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இம்மையங்களில், கொரோனா பாதிப்பு

உடுமலை : உடுமலையில், அங்கன்வாடி மையங்கள் பாதுகாப்பான நிலையில் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ள, பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உடுமலையில், 143, குடிமங்கலத்தில், 75 மற்றும் மடத்துக்குளத்தில், 77 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. பருவமழை தீவிரமடைந்து வருவதால், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இம்மையங்களில், கொரோனா பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, குழந்தைகள் அனுமதிக்கப்படாமல் உள்ளனர். பணியாளர்கள் நேரடியாக குழந்தைகளின் வீடுகளுக்குச்சென்று, கண்காணித்தும், அரசின் திட்டப்பொருட்களையும் வழங்கி வருகின்றனர்.

பருவமழை பரவலாக இருப்பதால், அங்கன்வாடி மைய கட்டடங்களும் பாதுகாப்பான நிலையில் இருப்பதை உறுதிப்படுத்த, அலுவலர்கள் பணியாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். மழைநீர் தேங்கும் வகையிலும், சிதிலமடைந்து பாதுகாப்பில்லாமல் இருக்கும் கட்டடங்கள் குறித்து உடனடியாக தெரிவிக்கவும், அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X