சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பள்ளி மேலாளர் கொலை வழக்கில் சிக்கிய ஆதாரங்கள்//

Added : டிச 10, 2020
Share
Advertisement
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் தனியார் பள்ளி மேலாளர் கொலை வழக்கில் முக்கிய ஆதாரங்களை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். கோவிந்தாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் 48. திண்டுக்கல் -- திருச்சி ரோட்டில் உள்ள தனியார் பள்ளி மேலாளராக பணியாற்றினார். டிச. 4 ம் தேதி பணிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை.கடந்த டிச.8 காலை, ஆர்.எம். காலனி ரோட்டில் உள்ள

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் தனியார் பள்ளி மேலாளர் கொலை வழக்கில் முக்கிய ஆதாரங்களை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.



கோவிந்தாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் 48. திண்டுக்கல் -- திருச்சி ரோட்டில் உள்ள தனியார் பள்ளி மேலாளராக பணியாற்றினார். டிச. 4 ம் தேதி பணிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை.கடந்த டிச.8 காலை, ஆர்.எம். காலனி ரோட்டில் உள்ள மின்மயானம் அருகே கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் நிர்வாணமாக மணிகண்டனின் உடல் மீட்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் போலீசார் விசாரணை மேற்கொண்டாலும் இதுவரை குற்றவாளிகள் சிக்கவில்லை.எஸ்.பி., ரவளிபிரியா உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன், எஸ்.ஐ., மாரிமுத்து தலைமையில் தனிப்படை போலீசாரும், மேலும் 4 எஸ்.ஐ., 2 இன்ஸ்பெக்டர்கள் கொண்ட குழுவினரும் அமைக்கப்பட்டு விசாரித்து வருகின்றனர்.

கொடூரமான தாக்குதல்முதற்கட்டமாக சிசிடிவி., காட்சிகளின் அடிப்படையில் நடந்த விசாரணையில் மணிகண்டனை கொலை செய்து, இருசக்கர வாகனத்தில் உடலை கொண்டு வருவது போன்ற காட்சிகள் பதிவானது தெரியவந்தது. அவரை மின்மயானம் அருகே நிர்வாணமாக்கி கட்டிப் போட்டுச் சென்றுள்ளனர். பைக்கின் விளக்குகளை அணைத்து விட்டு குற்றவாளிகள் வந்ததால் அதன் நம்பர் குறித்த விவரங்களோ, முகமோ தெரியவில்லை.மேலும், மணிகண்டன் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். குறிப்பாக பிறப்புறுப்பின் மீது அதிகமாக தாக்கியுள்ளனர். பைக்கில் வந்தவர்கள் தான் குற்றவாளிகளா அல்லது வேறு எவரும் கொலை செய்துவிட்டு, மின்மயானத்தில் உடலை வீசிச்செல்ல இவர்கள் வந்தனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.கொடுக்கல் வாங்கல் அல்லது பெண்கள் தொடர்பாக கொலை நடந்திருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. வழக்கமாக கொலை நடந்தால் அடுத்தநாளே குற்றவாளிகள் பிடிபடுவதோ, அவர்களாகவே கோர்ட்டில் சரணடைவதோ வழக்கம். இந்த வழக்கில் போலீசார் தீவிரமாக விசாரித்தாலும், துப்பு கிடைக்கவில்லை. முக்கிய ஆதாரங்கள் சிக்கியுள்ளன. ஓரிரு நாட்களில் கொலையாளிகள் பிடிபடுவர் என தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X