உடுமலை : மழை தீவிரமடைந்துள்ள நிலையில், டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கவும், உள்ளாட்சி அமைப்புகள் நோய் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறையினர் கூறியதாவது:கொரோனா பரவுவதைத் தடுக்க, சமூக இடைவெளி கடைபிடித்தல், முகக்கவசம் அணிதல் போன்றவற்றை கடைபிடிப்பதைப் போன்றே, டெங்கு தாக்காமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம்.டெங்கு காய்ச்சல் ஏடிஸ் வகை கொசுக்களால் உருவாகின்றன. தேங்கியுள்ள மழைநீர், பாத்திரங்கள், தொட்டிகளில் சேமித்து வைக்கப்படும் நன்னீர் ஆகியவற்றில் இக்கொசுக்கள் உற்பத்தியாகின்றன.
தொட்டிகளில், தண்ணீரைப் பெயரளவுக்கு மூடி வைக்காமல், காற்றுப்புகாத வகையில் மூடி வைப்பது அவசியம்.வீணாக உள்ள டயர், தேங்காய் சிரட்டை, பாட்டில்கள் உள்ளிட்ட பொருட்களில் மழைநீர் தேங்காமல், தாங்கள் வசிக்கும் பகுதி மற்றும் வீட்டின் சுற்றுப்புறங்களைப் பார்த்துக்கொள்ள வேண்டும்.உள்ளாட்சி நிர்வாகங்கள், பொது இடங்களில் நன்னீர் தேங்குவதை தடுக்கவும், சுகாதார பணிகள், நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டது.குடிநீர் வினியோக குளறுபடிகளால், பல நாட்கள் குடிநீரை சேமிக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. எனவே, உள்ளாட்சி அமைப்புகள் குடிநீர் வினியோகத்தை முறைப்படுத்த வேண்டும். இவ்வாறு, சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE