உடுமலை : உடுமலையில், பிரதான ரோடுகள் சந்திக்கும் முக்கோணத்தில் ரவுண்டானா அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவை-- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், ஆனைமலை செல்லும் ரோடு இணைகிறது.தளி, வாளவாடி ரோடு மற்றும் தேவனுார்புதுார்- ஆனைமலை ரோடு என மாநில நெடுஞ்சாலையும், தேசிய நெடுஞ்சாலையும் இணையும் பகுதியில், போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன.
பொள்ளாச்சி மற்றும் உடுமலை பகுதியிலிருந்து அதிவேகமாக வரும் வாகனங்களும், ஆனைமலை ரோட்டில் வரும் வாகனங்களும், ரோடுகளில் இணையும் போது சிக்கல் ஏற்படுகிது.அதே போல், குறுகலான வளைவு, எதிரே வரும் வாகனங்கள் தெரியாதது, ரோட்டின் இருபுறங்களிலும் பஸ்கள் மற்றும் ரோடுகளை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் சரக்கு வாகனங்களால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இப்பிரச்னைக்கு தீர்வாக, முக்கோணம் பகுதியில், சிக்னல் மற்றும் ரவுண்டானா அமைக்க வேண்டும் என, பல ஆண்டு கால கோரிக்கை உள்ளது. இதற்கான, ரோடுகளை பயன்படுத்தும் வாகனங்கள் மற்றும் திட்ட வடிவமைப்பு குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.ஆய்வு செய்து, மூன்று ஆண்டாகியும், எந்த பணிகளும் மேற்கொள்ளவில்லை. எனவே, தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் மாவட்ட முக்கிய சாலை இணையும் முக்கோணம் பகுதியில் சிக்னல் மற்றும் ரவுண்டானா அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE