சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண் இன்ஸ்பெக்டர் மீது கொத்தடிமை சிறுமி புகார்

Added : டிச 10, 2020
Share
Advertisement
தஞ்சாவூர்: தத்தெடுத்து கொத்தடிமையாக நடத்தியதாக, தஞ்சை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது, 16 வயது சிறுமி ஒருவர், கலெக்டரிடம் புகார் அளித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை ஆதிதிராவிடர் தெருவைச் சேர்ந்தவர் பவானி, 52. இவர், 16 ஆண்டுகளுக்கு முன், ஆதரவற்ற நிலையில் இருந்த பெண் குழந்தையை வளர்த்து வந்தார். மூன்று ஆண்டுகளுக்கு முன், பவானி வீட்டிற்கு சென்ற

தஞ்சாவூர்: தத்தெடுத்து கொத்தடிமையாக நடத்தியதாக, தஞ்சை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது, 16 வயது சிறுமி ஒருவர், கலெக்டரிடம் புகார் அளித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை ஆதிதிராவிடர் தெருவைச் சேர்ந்தவர் பவானி, 52. இவர், 16 ஆண்டுகளுக்கு முன், ஆதரவற்ற நிலையில் இருந்த பெண் குழந்தையை வளர்த்து வந்தார். மூன்று ஆண்டுகளுக்கு முன், பவானி வீட்டிற்கு சென்ற குழந்தைகள் நல அமைப்பினர், 'அனுமதி பெறாமல், சிறுமியை வளர்ப்பது சட்டப்படி குற்றம்' எனக் கூறி, சிறுமியை மீட்டு, அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

தஞ்சாவூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டரான சந்திராவுக்கு, மூளை வளர்ச்சி குறைபாடுடைய ஒரு மகன் உள்ளார். இந்நிலையில், அந்தச் சிறுமியை, முறைப்படி தத்தெடுத்ததாக கூறி, மகனுக்கு சாப்பாடு கொடுப்பது உட்பட அனைத்து பணிகளையும் செய்ய வைத்துள்ளார். சில நாட்களுக்கு முன், சந்திரா வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி, வளர்ப்பு தாய் பவானியிடம் தஞ்சம் அடைந்துஉள்ளார்.

நேற்று பவானி, அவரது உறவினர் கவிதா, சமூக ஆர்வலரான ஆதி மதனகோபால் ஆகியோருடன், கலெக்டர் அலுவலகத்திற்கு சென்ற சிறுமி, இன்ஸ்பெக்டர் சந்திரா, தன்னை கொத்தடிமை போல் நடத்தியதாக, புகார் அளித்தார். சிறுமியிடம் இரண்டு மணி நேரம் விசாரணை நடத்திய கலெக்டர் கோவிந்தராவ், அரசு காப்ப கத்தில் சிறுமியை தங்க வைக்குமாறு, குழந்தைகள்நல அமைப்பினருக்கு உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X