சிவகங்கை : கிராமப்புற மக்களின் தேவையறிந்து அதிகாரிகள்செயல்பட வேண்டும், என ஊரகவளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி பேசினார்.
கலெக்டர் அலுவலக வளாக அரங்கில் ஊரகவளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.கலெக்டர் மதுசூதன் பேசியதாவது: கிராமப்புற வளர்ச்சியில் அதிகாரிகள் அக்கறை காட்டவேண்டும். வட்டாரவளர்ச்சி அலுவலர்கள், தங்களுக்கு கீழ் நிலையில் உள்ள அதிகாரிகளை கொண்டு வாரம்தோறும் கிராம ஊராட்சிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும். கிராமப்புற மக்களின் தேவையறிந்து அதிகாரிகள்அதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.மக்களின் அத்தியாவசிய தேவைகளான தெருவிளக்கு, குடிநீர் போன்ற பிரச்னைகளை உடனுக்குஉடன் தீர்வு காண வேண்டும்.
மக்கள் ஒற்றுமையுடன் கிராமப்புறங்களில் வாழ்வதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். மக்கள் சுகாதாரமாக வாழ அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சமுதாய கூடங்கள் அமைக்கும் போது மக்கள் பயன்பாட்டுக்கு ஏற்றதாக அமைக்க வேண்டும், என அவர் பேசினார்.நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி திட்ட முகமை இயக்குநர் வடிவேல், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் சண்முகம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஊராட்சிகள் வீரராகவன் உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE