பொது செய்தி

தமிழ்நாடு

சோனியா பிறந்தநாள் விழா கட்சியினர் கொண்டாட்டம்

Added : டிச 10, 2020
Share
Advertisement
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் சிறுமுகையில், காங்., கட்சி தலைவர் சோனியாவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.மேட்டுப்பாளையம் நகர காங்., கட்சி சார்பில், காட்டூர் வலம்புரி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. நகர தலைவர் தங்கமணி தலைமை வகித்தார். மாவட்ட பொறுப்பாளர்கள் சுப்ரமணி, ரகமத்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் கவுன்சிலர்கள் நாகராஜ்,

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் சிறுமுகையில், காங்., கட்சி தலைவர் சோனியாவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

மேட்டுப்பாளையம் நகர காங்., கட்சி சார்பில், காட்டூர் வலம்புரி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. நகர தலைவர் தங்கமணி தலைமை வகித்தார். மாவட்ட பொறுப்பாளர்கள் சுப்ரமணி, ரகமத்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் கவுன்சிலர்கள் நாகராஜ், புருஷோத்தமன் உட்பட நகர நிர்வாகிகள், கட்சியினர் பங்கேற்றனர்.சிறுமுகையில் காங்., கட்சி சார்பில், நகர தலைவர் வெங்கடாசலம் மூர்த்தி தலைமை வகித்தார். மகளிரணி சுதா, உதயகுமார் முன்னிலை வகித்தனர். சந்திரன் வரவேற்றார். கிருஷ்ணசாமி கட்சிக் கொடியேற்றினார். நாச்சிமுத்து இனிப்பு வழங்கினார். சீனிவாசன் நன்றி கூறினார்.

* கோவை வடக்கு மாவட்ட காங்., மற்றும் சோமனுார் நகர காங்., சார்பில், கோவை வடக்கு மாவட்ட காங்., கட்சி தலைவர் மனோகரன் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.மாவட்ட நிர்வாகிகள் முருகேசன், கந்தசாமி, ராமசாமி, நகர தலைவர் பாலசுப்ரமணியம், துணைத் தலைவர் ராமசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.

* பெரியநாயக்கன்பாளையத்தில் நகர தலைவர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். நாயக்கன்பாளையம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சின்னராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சின்னராஜ் கொடியேற்றினார். வட்டார பொறுப்பாளர் ராஜசேகர், இனிப்பு வழங்கினார்.

* அன்னுார் ஓதிமலை சாலை சந்திப்பில், காங்., கட்சியினர் கொடியேற்றி, இனிப்பு வழங்கினர். நகர காங். தலைவர் அப்துல் கரீம் தலைமையில், மாநில பொதுக்குழு உறுப்பினர் சவுந்தரராஜன், வட்டார தலைவர்கள் பொன்னுச்சாமி, தங்கம் பழனிச்சாமி உள்பட மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X