திண்டுக்கல் : 'இயற்கை சீற்றத்தில் மாடு இறந்தால் ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும்' என, திண்டுக்கல் கால்நடை முன்னாள் இணை இயக்குனர் ராஜேந்திரன் தெரிவித்தார்.
அவர் தெரிவித்தது: மழைக்காலத்தில் ஆடுகளை நீலநாக்கு நோய் தாக்கும். கொட்டகையை சுற்றி தேங்கும் மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகும். இவை நீல நாக்கு நோயை பரப்புவதில் இடைநிலை காரணிகளாக செயல்படுகின்றன. அதனால் உடனுக்குடன் கழிவுகளை அகற்ற வேண்டும். பண்ணையை சுற்றி சுண்ணாம்பு துாளை துாவ வேண்டும். முன்னெச்சரிக்கையாக தடுப்பூசி போட வேண்டும்.நாட்டுக்கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சலுக்கான தடுப்பூசி போடுவது அவசியம். கனமழை, புயல் போன்ற இயற்கை சீற்றங்களின் தாக்குதலால் கால்நடைகள் இறக்க நேரிடும்.
அப்போது அவற்றை உடனே புதைத்து விடாமல் கால்நடை மருத்துவரின் சோதனைக்கு உட்படுத்தி சான்றிதழ் பெற வேண்டும். பின், வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவித்தால் இழப்பீடு தொகை வழங்கப்படும். மாடு இறந்தால் ரூ.30,000, கன்றுக்கு ரூ.16,000, எருதுக்கு ரூ.25,000, ஆட்டிற்கு ரூ.3000 வழங்கப்படும் என, அவர் தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE