பழநி : பழநி பகுதியில் நல்ல மழைபெய்தும் சில குளங்கள் நிரம்பாததால் விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர்.
புரெவி புயல் தாக்கத்தால் கொடைக்கானல், பழநி மலைப்பகுதியில் கனமழை பெய்ததால் வரதமாநதி அணை, பாலாறு- - பொருந்தலாறு, குதிரையாறு அணைகள் நிரம்பி உபரிநீர் அதிகளவில் வெளியேறி வருகிறது.ஆனால் பச்சையாற்றில் தடுப்பணை இல்லாததால் பெருக்கெடுத்து ஓடும் நீர் ஆற்றில் வீணாகிறது. இதனால் 1000 ஏக்கருக்கு மேல் பாசன வசதி அளிக்கும் அதிகாரி குளம், சர்க்கரை கவுண்டன்குளம் உள்ளிட்ட சிலவற்றுக்கு தண்ணீர் வரத்து இன்றி வறண்டுள்ளது.அழகாபுரி விவசாயி மாசிமலை கூறியதாவது: பச்சையாற்றில் அதிகளவில் தண்ணீர் சென்றாலும் சிறிதளவே குளத்திற்கு வருகிறது.
ஆற்றில் தடுப்பணை கட்டியிருந்தால் ஒடைய குளம், அதிகாரிகுளம், சர்க்கரை கவுண்டன் குளத்திற்கு தண்ணீர் வந்திருக்கும். எனவே நீர்வரத்து ஏற்பட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். அது குளத்துப் பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE