பொது செய்தி

தமிழ்நாடு

குப்பை மேடாக மாறிய கவுசிகா நதி பள்ளம்!

Added : டிச 10, 2020
Share
Advertisement
கோவில்பாளையம் : டன் கணக்கில் குப்பை கொட்டப்படுவதால், கவுசிகா நதி செல்லும் பள்ளம் குப்பை மேடாக மாறியுள்ளது.கோவை மாவட்டத்தில், மேற்கே குருடிமலை மற்றும் பொன்னுாத்து மலையிலிருந்து, கவுசிகா நதி துவங்கி, குருடம்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில், தன்னாசி பள்ளம், செம்பள்ளம் ஆகிய ஓடைகளை சேர்த்து, என்.ஜி.ஜி.ஓ., காலனி, இடிகரை, அத்திப்பாளையம், கோவில்பாளையம்,

கோவில்பாளையம் : டன் கணக்கில் குப்பை கொட்டப்படுவதால், கவுசிகா நதி செல்லும் பள்ளம் குப்பை மேடாக மாறியுள்ளது.

கோவை மாவட்டத்தில், மேற்கே குருடிமலை மற்றும் பொன்னுாத்து மலையிலிருந்து, கவுசிகா நதி துவங்கி, குருடம்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில், தன்னாசி பள்ளம், செம்பள்ளம் ஆகிய ஓடைகளை சேர்த்து, என்.ஜி.ஜி.ஓ., காலனி, இடிகரை, அத்திப்பாளையம், கோவில்பாளையம், வாகராயம்பாளையம் வழியாக, திருப்பூர் மாவட்டம் சுல்தான்பேட்டை அருகே நொய்யல் ஆற்றில் கலக்கிறது. 52 கிலோ மீட்டர் துாரம் உள்ள இந்த நதி, பராமரிப்பு இல்லாததால், நீர் வரத்து முற்றிலும் நின்றுவிட்டது.

இந்நிலையில், கவுசிகா நதி நீர் மேம்பாட்டு சங்கம் சார்பில், பல்வேறு நீர்நிலை மேம்பாட்டு அமைப்புகளுடன் சேர்ந்து, பல இடங்களில், சிறிய தடுப்பணைகளும், நீரைத் தேக்கி வைக்கும் கட்டமைப்புகளும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்தாண்டு, கோவில்பாளையத்தில், கோவை சாலையில், பெரிய பாலத்துக்கு கீழே துார்வாரப்பட்டு மழை காலத்தில் பள்ளத்தில் நீர் செல்லும்படி பணிகள் நடந்தன.

ஓராண்டு முடிந்த நிலையில், கோவில்பாளையம் பேரூராட்சியில், பாலத்துக்கு மேற்கே, ஒரு கி.மீ., தொலைவுக்கும், கிழக்கே ஒரு கி.மீ., தொலைவுக்கும், புதர்கள், செடிகள், கட்டிட கழிவுகள் குவிந்துள்ளன. மேலும் தனியார் நிறுவனங்கள் சார்பில், குப்பைகளையும், கழிவுகளையும் டன் கணக்கில் இந்த பள்ளத்தில் கொட்டப்படுகின்றன. மரங்கள், புதர்கள் என மழை நீர் செல்லாத அளவுக்கு தடை ஏற்படுத்தியுள்ளன. இரண்டு கி.மீ., தொலைவுக்கு குப்பை மேடாக காட்சி தருகிறது. 'பேரூராட்சி நிர்வாகமும், பொதுமக்களும் இணைந்து கவுசிகா நதி செல்லும் பள்ளத்தில் குப்பை, கட்டட கழிவுகளை கொட்டாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்குள்ள புதர்களையும், குப்பைகளையும் அகற்றுவதற்கும் முன்வர வேண்டும்' என, சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X