சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ. 1.15 கோடி மோசடி இருவருக்கு 10 ஆண்டு

Added : டிச 10, 2020
Share
Advertisement
கோவை:நிதி நிறுவனம் நடத்தி, 1.15 கோடி ரூபாய் மோசடி செய்த இருவருக்கு, 10 ஆண்டுகள் சிறை, 75 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.சேலம் மாவட்டம், ஓமலுாரைச் சேர்ந்தவர் கணேசன், 55; ஈரோடு மாவட்டம், பெருந்துறை விஜயமங்கலத்தில், 'ராஜராஜேஸ்வரி பவுல்டரி' என்ற பெயரில், 2012ல் நிதி நிறுவனம் நடத்தினார்.திட்டத்தில், '1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், 375 நாட்டுக் கோழிகள் வழங்கப்படும்; அதற்கான

கோவை:நிதி நிறுவனம் நடத்தி, 1.15 கோடி ரூபாய் மோசடி செய்த இருவருக்கு, 10 ஆண்டுகள் சிறை, 75 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

சேலம் மாவட்டம், ஓமலுாரைச் சேர்ந்தவர் கணேசன், 55; ஈரோடு மாவட்டம், பெருந்துறை விஜயமங்கலத்தில், 'ராஜராஜேஸ்வரி பவுல்டரி' என்ற பெயரில், 2012ல் நிதி நிறுவனம் நடத்தினார்.திட்டத்தில், '1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், 375 நாட்டுக் கோழிகள் வழங்கப்படும்; அதற்கான பராமரிப்பு செலவு தொகையாக மாதம், 7,000 மற்றும் ஊக்கத் தொகையாக மாதம், 8,000 ரூபாய் வழங்கப்படும்' என, விளம்பரம் செய்தார்.

இத்திட்டத்தில், 76 பேர், 1.15 கோடி ரூபாய் முதலீடு செய்தனர். பணத்தை பெற்ற கணேசன், முதலீட்டாளர்களுக்கு முதிர்வு தொகையை அளிக்காமல் மோசடி செய்தார். கணேசன், அவரது மனைவி மல்லிகா, 48, மற்றும் முருகேஷ், 28, ஆகியோரை கைது செய்து, கோவை டான்பிட் கோர்ட்டில் போலீசார் வழக்கு தாக்கல் செய்தனர். கணேசன் உயிரிழந்ததால் அவர் மீதான வழக்கு கைவிடப்பட்டது.

விசாரித்த நீதிபதி ரவி, மல்லிகா, முருகேஷ் ஆகிய இருவருக்கும், 10 ஆண்டுகள் சிறை, மொத்தம், 75 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். அபராத தொகையில், 70 லட்சம் ரூபாயை முதலீட்டாளர்களுக்கு வழங்க உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X