நத்தம் : நத்தம் பகுதி திருமணிமுத்தாறில் பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் நீர்வரத்து ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் ஆறுதலடைந்துள்ளனர்.
நத்தம் பகுதியின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது திருமணிமுத்தாறு. சிறுமலை அடிவாரம் மலைப்பட்டி, கொரசினம்பட்டி, மற்றும் கரந்தமலை பகுதிகளில் இருந்து வரும் சிற்றோடைகள் இணைந்து உருவாகிறது.புண்ணபட்டி, நத்தம், கோவில்பட்டி, சமுத்திராபட்டி வழியாக செல்கிறது. கடந்த 10 வருடங்களாக இப்பகுதியில் போதிய மழை பெய்யாததால் வறண்டு கிடந்தது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து போனது.கோடை மழையால் ஏற்படும் திடீர் காட்டாற்று வெள்ளம் ஏற்படும். சில மணி நேரத்தில் வந்த அடையாளம் தெரியாமல் வடிந்து விடும்.
பருவமழை காலத்தில் ஏற்படும் நீண்ட நாள் நீர்வரத்தால் மட்டும் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.இந்நிலையில் சிறுமலை மற்றும் கரந்தமலை பகுதியில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் கடந்த ஒரு வாரமாக திருமணிமுத்தாறில் தொடர்ந்து நீர்வரத்து உள்ளது. இந்த நீர் மணல் திருட்டால் ஏற்பட்ட மெகா பள்ளங்களை நிரப்பி நத்தம் நகர் பகுதியை கடந்து சென்றுள்ளது. பருவமழை தொடரும் பட்சத்தில் ஆற்றில் நீண்ட நாட்களுக்கு நீர்வரத்து இருக்கும். இதனால் ஆற்றின் இருபுறம் உள்ள விவசாய நிலங்களில் நித்தடி நீர் உயரும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE