பொருளாதாரத்தை திட்டமிடுதல், பல்வேறு துறைக் கூறுகளின் பங்களிப்பு, தொழில் நிறுவனங்கள் வளர்ச்சிக்கான காரணிகளை கணிக்க, வேலை வாய்ப்பை பெருக்கும் நோக்கில் 7வது பெருளாதாரக் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. \
இப்பணி அலைபேசி செயலி மூலம் மேற்கொள்ளப்படுகிறது. அதில் வீடு, குடும்ப உறுப்பினர் எண்ணிக்கை, தொழில் நடவடிக்கைகள், நிறுவன உரிமையாளர் பற்றிய விவரங்கள், ஊதியம் பெறும், பெறாத பணியாளர்களின் பாலின விவரம். முதலீடுகளுக்கான ஆதாரங்கள், ஆண்டு பண பரிமாற்றம், இணையதள வசதிகள், பான் எண், நிறுவனங்களின் பதிவு விவரம், கிளை நிறுவனம் எனில் அதன் தலைமை நிறுவனம் தொடர்பான விவரங்கள் சேகரிக்கப்படுகிறது. இதனால் மக்கள் அச்சப்பட தேவையில்லை.
கணக்கெடுப்பாளர் சி.எஸ்.சி.,யால் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டையுடன் வருவார். கணக்கெடுப்புக்கான பிரத்யேக அலைபேசியை அவரை தவிர மற்றவர்களால் இயக்க முடியாது. சேகரிக்கப்படும் விவரங்கள் ரகசியம் காக்கப்படும்.தொழில் நடவடிக்கைகள் சார்ந்த விவரங்கள் தவிர தனி நபருக்கான மாத வருமானம், மதம், சாதி போன்ற எந்த விவரங்களும் சேகரிக்கப்படாது. டிச.31 க்குள் இப்பணியை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. எனவே, கணக்கெடுப்பு பணியாளர்களுக்கு விவரங்களை அளித்து ஒத்துழைக்க வேண்டும் என, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE