வடமதுரை : கனமழையில் பயிர்களை பாதுகாப்பது குறித்து வடமதுரை தோட்டக்கலை உதவி இயக்குனர் சித்தார்த்தன் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: கன மழை பெய்ய வாய்ப்புள்ளதால் காய்கறி, மலர், மருத்துவ மற்றும் மலைப்பயிர் வயல்களில் வடிகால் வசதி செய்ய வேண்டும். நீர் தேங்கினால் வெளியேற்ற வேண்டும். பயிர் அழுகல் நோய்க்கு காப்பர் அக்சி குளோரைடு, கார்பன் டை சிம் போன்ற மருந்துகள் தெளிக்க வேண்டும்.பழ மரங்களில் கவாத்து செய்து சுமையை குறைப்பதன் மூலம் மரம் சேதமடைவதை தவிர்க்கலாம். மரங்களின் அடியில் மண் அணைக்க வேண்டும்.
தக்காளி செடிக்கு ஊன்று கோல் அமைத்தும், மாதுளை, கொய்யா போன்றவற்றிற்கு பூஞ்சான நோய் தடுப்பு மருந்தும் தெளிக்க வேண்டும். பசுமை குடில் விவசாயிகள் டிரைக்கோடெர்மா விரிடி பூஞ்சாண உயிரியல் கொல்லியினை நிலத்தில் தெளிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு 8248506019 என்ற எண்ணை அழைக்கலாம்' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE