பொது செய்தி

தமிழ்நாடு

430 நாட்டுவேம்பு மரக்கன்று; ஆர்வம் காட்டிய விவசாயி

Added : டிச 10, 2020
Share
Advertisement
திருப்பூர் : தாராபுரம், பழனிகவுண்டன் வலசில் நடந்த, 'வனத்துக்குள் திருப்பூர் -6' திட்டத்தின், 91 வது நிகழ்ச்சியில், 430 நாட்டு வேம்பு நடப்பட்டன.'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில், விவசாய நிலங்கள், கோழிப்பண்ணை வளாகம், அரசு மற்றும் கோவில் நிலங்களில், மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்படுகின்றன. இலக்கான, 10 லட்சம் மரக்கன்றுகள் நடும் இலக்கை, இக்குழுவினர் வெற்றிகரமாக
 430 நாட்டுவேம்பு மரக்கன்று; ஆர்வம் காட்டிய விவசாயி

திருப்பூர் : தாராபுரம், பழனிகவுண்டன் வலசில் நடந்த, 'வனத்துக்குள் திருப்பூர் -6' திட்டத்தின், 91 வது நிகழ்ச்சியில், 430 நாட்டு வேம்பு நடப்பட்டன.

'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில், விவசாய நிலங்கள், கோழிப்பண்ணை வளாகம், அரசு மற்றும் கோவில் நிலங்களில், மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்படுகின்றன. இலக்கான, 10 லட்சம் மரக்கன்றுகள் நடும் இலக்கை, இக்குழுவினர் வெற்றிகரமாக அடைந்துள்ளனர்.

விவசாயிகள் தொடர்ந்து ஆதரவு கொடுப்பதால், மரக்கன்று நடவு பணி தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தாராபுரம், நல்லாம்பாளையத்தில், 91வது மரக்கன்று நடவு நடந்தது. பழனிகவுண்டன்வலசு, தெற்கால தோட்டத்தில், நேற்று, 430 நாட்டு வேம்பு மரக்கன்றுகள் நடப்பட்டன.

தோட்ட உரிமையாளர் ராமசாமி, அங்கமுத்து, செந்தில்குமார், சிவராஜ், சரவணன், கலையரசி, சுரேஷ், தமிழரசி மற்றும் திட்டக்குழுவினர், மரக்கன்று நடவு பணியை துவக்கி வைத்தனர்.இத்திட்டத்தில், மரக்கன்று நட்டு வளர்க்க விரும்புவோர், 90470 86666 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X