திருப்பூர் : 'ஸ்மார்ட் சிட்டி' பணியால், நெடுஞ்சாலை முழுதும் துண்டிக்கப்பட்டுள்ளதால், மக்களின் சிரமத்தை உணர்ந்து, மாற்றுப்பாதையை சீரமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
திருப்பூர், மாநகராட்சியின், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், புதிய தார்ரோடு அமைக்கும் பணி, பாதாள சாக்கடை குழாய் பதிப்பு பணி, குடிநீர் அபிவிருத்தி திட்ட பணி நடந்து வருகின்றன. நகரின் பெரும்பாலான பகுதிகளில், ரோட்டில் குழி தோண்டி, பணி மந்தமாக நடந்து வருகின்றன.குறிப்பாக, திருப்பூர் தெற்கு தொகுதியில், பணி வேகமாக நடக்கும் நிலையில், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மாநகராட்சி வார்டுகளில், பணி தவணை முறையில் நடக்கிறது.
மங்கலம் ரோடு, கோழிப்பண்ணை முதல், சின்னாண்டிபாளையம் பிரிவு வரை, மாநில நெடுஞ்சாலை ரோடு காணாமல் போய்விட்டது.பல கட்டமாக குழி தோண்டியதன் விளைவாக, மாநில நெடுஞ்சாலை ரோடு இருந்த சுவடு தெரியாமல், சேற்று வயல் போல் மாறிவிட்டது. பிரதான இணைப்பு ரோடு என்பதால், தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் சென்று வரும் அந்த ரோட்டில், போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலை ரோடு துண்டிப்பதால், மாற்றுப்பாதை வசதியை ஏற்படுத்த, மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.பொதுமக்கள் கூறியதாவது:மங்கலம் ரோடு மூன்று கி.மீ., துாரம் துண்டிக்கப்பட்டதால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.
பெரியாண்டிபாளையம், முத்துநகர், சின்னாண்டிபாளையம் வழியாக மங்கலம் ரோடு செல்ல, சரியான மாற்று ரோடு இருக்கிறது.மாற்று ரோட்டிலும், பாதாள சாக்கடை குழாய் பதித்து, பெரும்பாலான பகுதி சேதமாகி, குண்டும், குழியுமாக உள்ளது. பாதாள சாக்கடை பணி முடிந்துள்ளதால், போர்க்கால அடிப்படையில், 'பேட்ஜ் ஒர்க்' செய்து கொடுத்தால், மக்கள் சிரமமின்றி மாற்றுப்பாதையை பயன்படுத்த முடியும்.ப
ல்லடம் தொகுதி எல்லை என்பதால், அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர். இனியும், பொதுமக்களை சோதிக்காமல், மாற்றுப்பாதையை சீரமைத்து கொடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE