திருப்பூர் : 'மறு உத்தரவு வரும் வரை, பஸ் பாஸ் செல்லும். மாணவர் பயன்படுத்திக் கொள்ளலாம்,' என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
கொரோனா ஊரடங்கால், ஏப்., முதல் நவ., வரை எட்டு மாதம் பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டன. கடந்த, 2 மற்றும், 7 ம் தேதி என இரண்டு கட்டமாக கல்லுாரி திறக்கப்பட்டு, இறுதியாண்டு மாணவருக்கு மட்டும் சமூக இடைவெளியுடன் வகுப்பு நடத்தப்படுகிறது.கல்லுாரி வந்து செல்லும் மாணவர் வசதிக்காக,' ஏற்கனேவே எடுத்த பஸ்பாஸ், மாதாந்திர பாஸ் மறுஉத்தரவு வரும் வரை செல்லுபடியாகும். சீருடை அல்லது சீருடை அணியாமல் வருவோர் கல்லுாரி அடையாள அட்டையை காண்பித்து பயணிக்கலாம்,' என, போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
அதேநேரம், மாதாந்திர சீசன் பாஸ் பெற்று பயணிக்கும் சாதாரண பயணிகளின் பாஸ் செல்லுபடியாகும் காலம் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. இதனால், தினமும் நடத்துனர் - சீசன்பாஸ் பெற்றவர் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE