திருப்பூர் : புதிய வயதுவந்தோர் கல்வி திட்டத்தின் கீழ் கற்பிக்கும் தன்னார்வ ஆசிரியர்கள் தங்கள் வருகை பதிவு தினந்தோறும் மொபைல் செயலில் பதிவேற்ற வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு எழுத்தறிவு முனைப்பு ஆணையம், 15 வயதுக்கு மேற்பட்ட அடிப்படை கல்வி அறிவு இல்லாதவருக்கு 'கற்போம் எழுதுவோம்' என்ற பெயரில் புதிய வயது வந்தோர் கல்வி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.திருப்பூரில், 13 ஒன்றியங்களிலும், 11 ஆயிரத்து, 975 பேர் பயிற்சி பெறுகின்றனர். இதற்காக, 799 கற்போர் மையங்கள் துவக்க, நடுநிலைப்பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ளன.மேலும், 799 தன்னார்வலர்கள் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள், நவ., 30ம் தேதி முதல் தினமும், 2 மணி நேரம் கற்பித்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வசதிக்கேற்ப வார இறுதி நாட்களில், 4 மணி நேர வகுப்பாகவும் எடுத்து வருகின்றனர்.மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூறியதாவது:ஒரு மையத்தில் குறைந்தபட்சம், 20 பேருக்காவது அடிப்படை எழுத்தறிவு கற்பிக்க வேண்டுமென்பது இலக்கு. தினந்தோறும் தன்னார்வல ஆசிரியர் மற்றும் கற்போர் வருகை விவரங்களை வருகை பதிவேட்டில் பதிவிடுவதுடன், அதற்குரிய மொபைல் செயலிலும் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கான பிரத்யேக பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது டிச., 11 முதல் அனைத்து மையங்களில் வருகைப்பதிவு நடைமுறைக்கு வரும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE