திருப்பூர் : மண்டலபூஜை விழாவையொட்டி, ஸ்ரீஐயப்ப சுவாமிக்கு நேற்று, ஆறாட்டு உற்சவம் விமரிசையாக நடைபெற்றது.
திருப்பூர், காலேஜ் ரோடு, ஸ்ரீஐயப்ப சுவாமி கோவிலில், 61வது மண்டல பூஜை விழா, கோலாகலமாக நடந்து வருகிறது. ஊரடங்கு அமலில் இருப்பதால், விதிமுறைகளை பின்பற்றி, பூஜைகள் மட்டும் நடந்து வருகின்றன. ஐயப்ப சுவாமிக்கு நேற்று, ஸ்ரீவீரராகவ பெருமாள் கோவிலில், ஆறாட்டு உற்சவம் நடைபெற்றது.ஐயப்பன் கோவிலில், அதிகாலை, 4:30 மணிக்கு மகா கணபதி ேஹாமம் நடந்தது.
காலை, 9:15 மணிக்கு, ஐயப்ப சுவாமி ஆறாட்டு உற்சவத்துக்காக, ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலுக்கு பவனி வந்தார்.சபரிமலை தந்திரி கண்டரு மோகனரு தலைமையில், காலை, 11:00 மணிக்கு ஆறாட்டு உற்சவம் துவங்கியது. ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில் குளத்திற்குள், ஐயப்ப சுவாமிக்கு ஆறாட்டு நடந்தது.
தொடர்ந்து, அபிேஷக, ஆராதனையும், சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது.அதனை தொடர்ந்து, ஸ்ரீஐயப்ப சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுத்தருளினார். தொடர்ந்து, சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டு, கொடி இறக்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE