தமிழ்நாடு

பிரிட்டனில், கொரோனா 2வது அலை ஓய்ந்தது! திருப்பூர் ஆடை ஏற்றுமதியாளர் நிம்மதி

Added : டிச 10, 2020
Share
Advertisement
திருப்பூர் : இரண்டாவது ஊரடங்கு நீக்கப்பட்டுள்ளதால், பிரிட்டனுக்கான ஆடை ஏற்றுமதி வர்த்தகம் எழுச்சிபெறும் என நம்பிக்கை கொண்டுள்ளனர், திருப்பூர் பின்னலாடை துறையினர்.கொரோனா ஊரடங்கால், அமெரிக்கா, ஐரோப்பா, பிரிட்டன் உட்பட உலகளாவிய நாடுகளில், கடந்த மார்ச் இறுதி முதல் மே மாதம் வரை, ஆயத்த ஆடை வர்த்தகம் முடங்கியது. இதன் எதிரொலியாக, திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு,
பிரிட்டனில், கொரோனா 2வது அலை ஓய்ந்தது! திருப்பூர் ஆடை ஏற்றுமதியாளர் நிம்மதி

திருப்பூர் : இரண்டாவது ஊரடங்கு நீக்கப்பட்டுள்ளதால், பிரிட்டனுக்கான ஆடை ஏற்றுமதி வர்த்தகம் எழுச்சிபெறும் என நம்பிக்கை கொண்டுள்ளனர், திருப்பூர் பின்னலாடை துறையினர்.

கொரோனா ஊரடங்கால், அமெரிக்கா, ஐரோப்பா, பிரிட்டன் உட்பட உலகளாவிய நாடுகளில், கடந்த மார்ச் இறுதி முதல் மே மாதம் வரை, ஆயத்த ஆடை வர்த்தகம் முடங்கியது. இதன் எதிரொலியாக, திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு, வெளிநாடுகளிலிருந்து புதிய ஆர்டர் வருகை தடைபட்டது.ஊரடங்கு தளர்த்தப்பட்டு, வெளிநாடுகளில் ஆடை வர்த்தகம் துவங்கியபோதும், செப்டம்பரில் தான், ஆடை ஏற்றுமதி மீண்டும் வளர்ச்சி நிலைக்கு திரும்பியது.

திடீரென, கொரோனா இரண்டாவது அலை வீசியதால், சில நாடுகளில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.குறிப்பாக, திருப்பூர் ஏற் றுமதி நிறுவனங்களுக்கு மிக முக்கியமான சந்தையாக உள்ள பிரிட்டனில், கடந்த நவம்பர் 5ம் தேதி முதல் இரண்டாம் கட்ட ஊரடங்கு அமலானது. இது, திருப்பூர் ஏற்றுமதியாளர் மத்தியில் பெரும் கவலையை பரவச்செய்தது. அந்நாட்டிலிருந்து ஆடை தயாரித்துக்கான வர்த்தக விசாரணை, புதிய ஆர்டர் வருகை தடைபட்டது.

தற்போது, வைரஸ் பரவல் வேகம் குறைந்துள்ளதால், பிரிட்டனில், இரண்டாவது ஊரடங்கு நீக்கப்பட்டுள்ளது. இதனால், அந்நாட்டிலிருந்து அதிகளவு ஆர்டர்கள் வரத்துவங்கும் என, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.திருப்பூர் பின்னலாடை துறை ஆலோசகர் சபரிகிரீஷ் கூறியதாவது:கொரோனா பரவல் அதிகரிப்பால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கடந்த நவ., 5ம் தேதி முதல், பிரிட்டனில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

தற்போது, கொரோனா இரண்டாவது அலை ஓய்ந்துள்ளது; கடந்த 2ம் தேதி முதல், ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசியும் தயாராகிவிட்டது.பொதுமக்களுக்கு படிப்படியாக தடுப்பூசி போடும் பணிகள் துவங்கிவிட்டன.இவையெல்லாம், பிரிட் டன் சந்தை மீது புது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. வரும் நாட்களில், பிரிட்டனிலிருந்து அதிகளவு ஆர்டர்கள் திருப்பூர் நோக்கி வருவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X