பொது செய்தி

தமிழ்நாடு

தொலைதூர இரவு பயணம் எளிதாகிறது! பஸ்களில், 100 சதவீதம் பயணிகளுக்கு அனுமதி

Added : டிச 10, 2020
Share
Advertisement
திருப்பூர் : ஊரடங்கு தளர்வை தொடர்ந்து, 50 சதவீத இருக்கைகளுடன் பஸ்கள் இயங்க துவங்கின. நேற்றுமுன்தினம் முதல், அரசு மற்றும் தனியார் பஸ்களில், நுாறு சதவீத இருக்கைகளில் பயணம் செய்ய அரசு அனுமதித்தது.பஸ்கள் இயங்கிவந்தாலும், கட்டுப்பாடுகள் இருந்ததால், பயணிகள் அதிகளவில் வர தயங்கினர். தினமும் பணிக்காக செல்வோர் கூட, சொந்த வாகனங்களைப் பயன்படுத்தத் துவங்கினர்.நான்கைந்து பேர்
 தொலைதூர இரவு பயணம் எளிதாகிறது!  பஸ்களில், 100 சதவீதம் பயணிகளுக்கு அனுமதி

திருப்பூர் : ஊரடங்கு தளர்வை தொடர்ந்து, 50 சதவீத இருக்கைகளுடன் பஸ்கள் இயங்க துவங்கின. நேற்றுமுன்தினம் முதல், அரசு மற்றும் தனியார் பஸ்களில், நுாறு சதவீத இருக்கைகளில் பயணம் செய்ய அரசு அனுமதித்தது.

பஸ்கள் இயங்கிவந்தாலும், கட்டுப்பாடுகள் இருந்ததால், பயணிகள் அதிகளவில் வர தயங்கினர். தினமும் பணிக்காக செல்வோர் கூட, சொந்த வாகனங்களைப் பயன்படுத்தத் துவங்கினர்.நான்கைந்து பேர் கூட்டாக சேர்ந்து, தங்கள் சொந்த ஊர்களில் இருந்து பணியிடங்களுக்கு வாடகை வாகனங்களில் வந்து செல்வோர் அதிகரித்தனர். பல்வேறு நிறுவனங்கள் தொழிலாளர்களை அழைத்துவர, கூடுதல் வாகனங்களைப் பயன்படுத்தி வந்தன.

தற்போது, நுாறு சதவீத இருக்கைகளுடன், வழக்கமான வழித்தடங்களில், முன்பு இருந்த அளவே பஸ்கள் இயங்கத் துவங்கியிருக்கின்றன. இதன் மூலம், பொதுப்போக்குவரத்து, ஊரடங்குக்கு முன்பு இருந்த இயல்பான நிலைக்குத் திரும்புவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

திருப்பூருக்கு நன்மை

திருப்பூர் மற்றும் புறநகர் பகுதிகளில் இயங்கிவரும் பின்னலாடை உள்ளிட்ட நிறுவனங்களில் பணிபுரிவதற்காக, திருப்பூர் மாவட்டம் மட்டுமல்லாது, கோவை, ஈரோடு உட்பட அண்டை மாவட்டங்களில் இருந்து தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்கள் அதிகளவில் பஸ்களையே, தங்கள் பயணத்திற்குப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கிராமப்புற தொழிலாளர்களும் அதிகளவில் பணிக்காக, நகரத்துக்கு எளிதாக பஸ் மூலம் வர முடியும்.

அட்டவணைப்படி...

இரவில், தொலைதுாரம் செல்லும் பஸ்கள், குறைந்த அளவே இயக்கப்பட்டு வந்தன. சென்னை, மதுரை, திருச்சி, நெல்லை, சேலம் என் மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும், இனி அட்டவணைப்படி தொலை துார பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இதனால், இரவில் தொலைதுாரங்களுக்குப் பயணிப்போர் அதிகரிப்பர்.

திருப்பூரை பொறுத்தவரை தென் மாவட்டங்கள், திருச்சி, சேலம் உள்ளிட்ட இடங்களுக்கு அதிகளவில் பஸ்களில் செல்வோர் அதிகம்.இரவில் பஸ்கள் இல்லாததால், காலை நேரத்தில் பயணம் செய்ய வேண்டியிருந்ததால், நேரம், செலவு அதிகரித்தது. இனி, இந்த சிரமம், பயணிகளுக்கு இருக்காது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X