பொது செய்தி

தமிழ்நாடு

சிறுவனுக்கு கிட்னி செயலிழப்பு : சிகிச்சைக்கு பணமின்றி பெற்றோர் தவிப்பு

Updated : டிச 10, 2020 | Added : டிச 10, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
மொடக்குறிச்சி: இரண்டு கிட்னிகளும் செயலிழந்து, உயிருக்கு போராடும் மகனை காப்பாற்ற பணமின்றி, பெற்றோர் தவிக்கின்றனர்.ஈரோடு மாவட்டம், கொடுமுடி, மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சரவணன், 45; ஓட்டலில், பணிபுரிகிறார். மனைவி கீதா, 38. மகன் நிஷாந்த், 13, ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஓராண்டாக, நிஷாந்திற்கு உடல் எடை கூடி, அடிக்கடி வாந்தி எடுத்துள்ளார். மருத்துவ
கிட்னி ,செயலிழப்பு, சிறுவன், பெற்றோர்,

மொடக்குறிச்சி: இரண்டு கிட்னிகளும் செயலிழந்து, உயிருக்கு போராடும் மகனை காப்பாற்ற பணமின்றி, பெற்றோர் தவிக்கின்றனர்.

ஈரோடு மாவட்டம், கொடுமுடி, மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சரவணன், 45; ஓட்டலில், பணிபுரிகிறார். மனைவி கீதா, 38. மகன் நிஷாந்த், 13, ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஓராண்டாக, நிஷாந்திற்கு உடல் எடை கூடி, அடிக்கடி வாந்தி எடுத்துள்ளார். மருத்துவ பரிசோதனையில், சிறுவனது இரண்டு கிட்னிகளும் செயலிழந்து உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.லயன்ஸ் டயாலிசிஸ் சென்டரில், இரண்டு நாட்களுக்கு ஒருமுறை, சிறுவனுக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டு வருகிறது.

கிட்னி மாற்றம் செய்து, சிகிச்சை பெற, 7 லட்சம் ரூபாய் செலவாகும் என, டாக்டர்கள் கூறியுள்ளனர். இதுவரை பல ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி, செலவு செய்துள்ளனர்.
சிறுவனை காப்பாற்ற, உறவினர்கள், கிட்னி தானம் வழங்க முன் வந்துள்ளனர்.
சிகிச்சையை தொடர, பண வசதியின்றி பெற்றோர் தவிப்பதால், 'அரசு உதவி செய்ய வேண்டும்' என, வேண்டு கோள் விடுத்துஉள்ளனர்.

உதவ, 90923 20035 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijay D Ratnam - Chennai,இந்தியா
10-டிச-202016:53:01 IST Report Abuse
Vijay D Ratnam அக்கவுண்ட் நம்பர் டீடைல்ஸ் பிரசுரித்தால் சிறு தொகையை மட்டும் அனுப்ப முடிந்தவர்களால் கணிசமான தொகை சேரும். சிறு துளி பெரும் வெள்ளமாக கூட மாறும்..
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
10-டிச-202008:34:38 IST Report Abuse
VENKATASUBRAMANIAN எங்கே சூர்யா jyothika போனார்கள். இதற்கு உதவி செய்வார்களா
Rate this:
Cancel
rauf thaseem - mawanella,இலங்கை
10-டிச-202007:46:45 IST Report Abuse
rauf  thaseem கோயிலுக்கு ஒரு கோடி ரூபாய் நிலத்தை கொடுத்த பெங்களூரு முஸ்லிம் முதியவர்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X