பொது செய்தி

தமிழ்நாடு

மாநகராட்சி இடம் அப்பட்டமான ஆக்கிரமிப்பு; நன்கு தெரிந்தும் மாநகராட்சி வேடிக்கை

Added : டிச 10, 2020
Share
Advertisement
கோவை : ராமநாதபுரம் ஒலம்பஸ் பகுதியில் வீதியை ஆக்கிரமித்து வீடுகள் கட்டி இருப்பதால், போக்குவரத்து வசதியின்றி, நடராஜ் தேவர் காலனி மக்கள் அவதிப்படுகின்றனர்.ராமநாதபுரம் ஒலம்பஸ் அருகில், 73வது வார்டு மற்றும், 74வது வார்டுக்கு இடையில் உள்ளது நடராஜ் தேவர் காலனி. இப்பகுதியில் 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.இங்குள்ள நாச்சியண்ணன் வீதிக்கும், நடராஜ் தேவர் காலனிக்கும் இடையில், 100

கோவை : ராமநாதபுரம் ஒலம்பஸ் பகுதியில் வீதியை ஆக்கிரமித்து வீடுகள் கட்டி இருப்பதால், போக்குவரத்து வசதியின்றி, நடராஜ் தேவர் காலனி மக்கள் அவதிப்படுகின்றனர்.

ராமநாதபுரம் ஒலம்பஸ் அருகில், 73வது வார்டு மற்றும், 74வது வார்டுக்கு இடையில் உள்ளது நடராஜ் தேவர் காலனி. இப்பகுதியில் 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.இங்குள்ள நாச்சியண்ணன் வீதிக்கும், நடராஜ் தேவர் காலனிக்கும் இடையில், 100 அடி நீளம், 30 அடி அகலம் கொண்ட நடைபாதை ஆக்கிரமிக்கப்பட்டு, வீடுகள் கட்டப்பட்டுள்ளன.இந்தஆக்கிரமிப்பு கடந்த, 40 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது.

இந்த இடம் மழைநீர் மற்றும் கழிவுநீர் செல்லும் வாய்க்காலாகவும், பொது வழித்தடமாகவும் இருந்துள்ளது.அருகில் குடியிருப்பவர்கள், வாய்க்காலை மட்டும் விட்டு விட்டு, இருபுறமும் இருந்த காலி இடத்தை ஆக்கிரமித்து, வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர்.10 சென்டுக்கு மேல் உள்ள இந்த இடத்தின், இன்றைய மதிப்பு சுமார் மூன்று கோடி ரூபாய் இருக்கும்.

இப்போது இந்த இடம் அங்குள்ள, ஐந்து வீட்டுக்காரர்களின் வசம் உள்ளது.இது மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடம் என்பதை, ஆக்கிரமித்து இருப்பவர்களும் ஒப்புக்கொள்கின்றனர்.இந்த ஆக்கிரமிப்பை அகற்றினால், ராமநாதபுரம், 80 அடி ரோட்டுடன் இந்த வீதி நேராக இணைக்கப்பட்டு விடும். இந்த பகுதியில் இருந்து செல்லும் வாகனங்கள் சுற்றி செல்ல தேவை இல்லை. கோவை நகரமைப்பு அலுவலக அதிகாரிகள் தலையிட்டு, இந்த நீண்ட கால ஆக்கிரமிப்பை அகற்றி, பாதையை மீட்டுத்தர வேண்டும் என, நடராஜ் தேவர் காலனி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நடராஜ்தேவர் காலனி குடியிருப்போர் நலச்சங்க செயலாளர் சேகர் கூறுகையில், ''இந்த ஆக்கிரமிப்பை அகற்றுவதில், எந்த சிக்கலும் இல்லை. இது பொது இடம் என்பது அங்கு குடியிருப்பவர்களுக்கு நன்றாக தெரியும். மாநகராட்சி அதிகாரிகள் வந்து அகற்றினால், இங்கு இருப்பவர்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்க போவதில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு, எங்கள் சங்கம் சார்பில், புகார் மனு கொடுத்து இருக்கிறோம். இதுவரை யாரும் வந்து நடவடிக்கை எடுக்கவில்லை,'' என்றார்.

இது குறித்து, மாநகராட்சி மத்திய மண்டல திட்ட உதவி செயற்பொறியாளர் ஹேமலதாவிடம் கேட்ட போது, ''இது குறித்துஇதுவரை எங்களுக்கு புகார் வந்ததாக தெரியவில்லை. சம்பந்தப்பட்ட பகுதியில் ஆக்கிரமிப்பு இருந்தால், நகர அமைப்பு திட்ட அலுவலரின் ஆலோசனையை பெற்று, நேரில் ஆய்வு செய்து, முறைப்படி ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுப்போம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X