கோவை : வீட்டின் பூட்டை உடைத்து ஒன்பது பவுன் நகை, ரூ.50 பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை சின்னவேடம்பட்டி லட்சுமி நகரை சேர்ந்தவர் விஜயகுமார், 50. நேற்று முன்தினம் உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க, வெளியூர் சென்று விட்டு நேற்று காலை வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்து, உள்ளே சென்று பார்த்தார்.வீட்டில் பீரோவில் இருந்த ஒன்பது பவுன் நகை, வெள்ளி குத்து விளக்கு, ரூ.50 ஆயிரம் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது. இதுகுறித்து, விஜயகுமார் அளித்த புகாரின் பேரில், சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE