கோவை : கோவையில் நடப்பாண்டு 192 பேர், குழந்தை தொழிலாளர்களாக மீட்கப்பட்டு, உரிய பயிற்சிக்கு பின், அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் சேர்க்கைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
குழந்தை தொழிலாளர்கள் முறை ஒழிப்பு திட்டத்தின் கீழ், கண்டறியப்படும் குழந்தைகள், சிறப்பு பள்ளிகளில் சேர்க்கப்பட்டு, குறுகிய, நீண்ட கால பயிற்சிகள் அவர்களின் கல்வித்திறன் அடிப்படையில் வழங்கப்படும்.கோவையில் இத்திட்டத்தின் கீழ் வெள்ளலூர், சுந்தராபுரம், கோவைப்புதூர், ஆனைமலை, நெகமம், தொண்டாமுத்தூர் உள்பட, 15 இடங்களில் சிறப்பு பள்ளிகள் செயல்பட்டன.தொழிற்சாலைகள், செங்கல் சூளைகள், விவசாய பண்ணைகளில் பணியாற்றிய பல குழந்தைகள் மீட்கப்பட்டு, இப்பள்ளிகளில் பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சிக்குப் பின், வழக்கமான பள்ளிகளில் சேர்க்க பரிந்துரைக்கப்பட்டு, கல்விக்காலம் முடியும் வரை தொடர்ந்து கண்காணிக்கப்படுவர்.கோவையில் நடப்பாண்டில், 192 குழந்தைகள் உரிய பயிற்சி முடித்துள்ள நிலையில், அவரவர் வீடுகளின் அருகாமையில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர்க்க பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, தேசிய குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு திட்ட, மாவட்ட இயக்குனர் விஜயகுமார் கூறுகையில்,'' குழந்தை தொழிலாளர்களாக மீட்கப்பட்டு, இரண்டாண்டு பயிற்சி முடித்த, 192 குழந்தைகளை வழக்கமான பள்ளிகளில் சேர்க்க பரிந்துரைத்துள்ளோம்.கொரோனா காரணமாக இதுவரை, 100 பேர் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களையும் சேர்ப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. மீட்கப்பட்ட குழந்தைகள், மீண்டும் குழந்தை தொழிலாளர்களாக மாறாமல் இருக்க, முழுமையாக கண்காணித்து வருகிறோம்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE