பொது செய்தி

தமிழ்நாடு

'மூலப்பொருட்கள் விலையேற்றம் கட்டுப்படுத்த கண்காணிப்பு குழு'

Added : டிச 10, 2020
Share
Advertisement
கோவை : மூலப்பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த, மத்திய அரசு கண்காணிப்பு குழு அமைக்க 'போசியா' வேண்டுகோள் விடுத்துள்ளது.கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு(போசியா) ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ் நிருபர்களிடம் கூறியதாவது:இரும்பு, தாமிரம், அலுமினியம் உள்ளிட்ட முக்கிய மூலப்பொருட்கள் விலை, 20 சதவீதத்தில் இருந்து, 30 சதவீதமாக இரு மாதங்களில் உயர்ந்துள்ளது.கடுமையாக

கோவை : மூலப்பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த, மத்திய அரசு கண்காணிப்பு குழு அமைக்க 'போசியா' வேண்டுகோள் விடுத்துள்ளது.

கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு(போசியா) ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ் நிருபர்களிடம் கூறியதாவது:இரும்பு, தாமிரம், அலுமினியம் உள்ளிட்ட முக்கிய மூலப்பொருட்கள் விலை, 20 சதவீதத்தில் இருந்து, 30 சதவீதமாக இரு மாதங்களில் உயர்ந்துள்ளது.கடுமையாக பாதிக்கப்படுவதால், மூலப்பொருட்களுக்கு நியாயமானஒரே விலை என்ற கோட்பாட்டில் இருக்க வேண்டும்.

மத்திய அரசு விலையை கட்டுப்படுத்த கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும்.விவசாயிகளுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் போன்று, உற்பத்தி தொழில் மூலப்பொருட்களுக்கு அதிகபட்ச விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.இரும்பு உள்ளிட்டவற்றுக்கு இறக்குமதி வரி, கூடுதல் இறக்குமதி வரி போன்றவற்றை முற்றிலும்விலக்கிக்கொள்ள வேண்டும்.

சிறிதுகாலம் இந்த உலோகங்களுக்கு, 5 சதவீத ஜி.எஸ்.டி., விதித்தால் விலை சீராகும்; பணப்பற்றாக்குறைக்கு தற்காலிக தீர்வு ஏற்படும்.இக்கோரிக்கைகளை வலியுறுத்தி வரும், 15ம் தேதி தெற்கு தாசில்தார் அலுவலகம் எதிரே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X