4 பேர் கைதுமதுரை: அனுப்பானடி உப்புகார மேட்டில் முன்விரோதத்தில் கொலை செய்யும் நோக்கி சிலர் பதுங்கியிருந்தனர். இதுதொடர்பாக கான்பாளையம் குமரேசன் 19, முனிச்சாலை இந்திராநகர் தினேஷ்பாபு 20, இஸ்மாயில்புரம் பாண்டியராஜன் 21, காமராஜர்புரம் சிவனேஸ்வரன் 19, ஆகியோரை தெப்பக்குளம் இன்ஸ்பெக்டர் கணேசன் கைது செய்தார்.பெண் கண்காணிப்பாளர் மீது மோசடி வழக்குமதுரை: கன்னியாகுமரி விளவங்கோடு மகேஷ் 35. இவருக்கு அறிமுகமான மதுரை கோ ஆப்டெக்ஸ் கண்காணிப்பாளர் கீதா, சங்கரன்கோவில் அரசு மருத்துவமனை கண் பிரிவில் பணியாற்றும் பழனிசாமி மூலம் அரசு வேலை வாங்கித்தருவதாக கூறினார்.
இதை நம்பி ரூ.22 லட்சம் கொடுத்து மகேஷ் ஏமாந்தார். பழனிசாமி, கீதா மீது அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.பள்ளி வளாகத்தில் திருட்டுமதுரை: கீழவெளிவீதி ஆர்.சி. பள்ளி வளாகத்தில் சிறுமலர் இல்லம் உள்ளது. இங்கு மர்மநபர் ஒரு அலைபேசி, ரூ.50 ஆயிரம், 17 பவுன் நகைகளை திருடிச்சென்றார். பாத்திமா மேரி புகாரில் தெற்குவாசல் போலீசார் விசாரிக்கின்றனர்.நுாதன திருட்டுமதுரை: ஏ.என். தோப்பு மீனா 55. இவருக்கு நன்கு அறிமுகமானவர்கள் மீனாட்சி, கணவர் பாலையா. சமீபத்தில் மீனாவுக்கு உடல்நலம் பாதித்தது. சொக்கிக்குளம் தனியார் மருத்துவமனையில் ஸ்கேன் பரிசோதனையின்போது 2 பவுன் நகைகள், ஒரு கிராம் தோடு, 230 கிராம் வெள்ளி கொலுசு, ஒரு அலைபேசியை கழட்டி மீனாட்சியிடம் கொடுத்தார். பரிசோதனை முடிந்து வந்தபோது மீனாட்சியை காணவில்லை. தல்லாகுளம் போலீசார் விசாரிக்கின்றனர்.
எட்டு பவுன் நகை திருட்டுவிக்கிரமங்கலம் : கீழப்பட்டி சந்தானம் மகன் முன்னறிவு 30, ஆட்டோ டிரைவர். நேற்று முன்தினம் இரவு கதவை பூட்டாமல் துாங்கி விட்டார். வீட்டிற்குள் நுழைந்த மர்மநபர்கள் பீரோவை திறந்து, எட்டே முக்கால் பவுன் நகை மற்றும் ரூ.600 ஐ திருடி சென்றனர். போலீசார் விசாரிக்கின்றனர்.மாடு திருடியவர்கள் கைதுவாடிப்பட்டி : பரவை செந்தில்குமார் மனைவி மேகலா 38. டிச., 2 இவர்களது பால் பண்ணையில் இருந்த பசு திருடு போனது. இதுதொடர்பாக குலமங்கலம் மணிகண்டன் 24, வாவிடமருதுார் பாலமுருகனை 19, கைது செய்த சமயநல்லுார் போலீசார் பசு மாட்டை பறிமுதல் செய்தனர்.
முன்விரோதத்தில் கத்திக்குத்துஅலங்காநல்லுார் : நல்லையாநாயக்கர் தெரு கண்ணன் 44, கூலி தொழிலாளி. தெருவில் சென்ற இவரை முன்விரோதத்தில் கத்தியால் கை மற்றும் தலையில் குத்தி விட்டு தப்பிய சங்கர், ரவிக்குமார், வினோத்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.வாலிபர் தற்கொலைமதுரை: தெற்குவாசல் இஸ்மாயில் மகன் தாஜூதீன் 20. தந்தையிடம் புது பைக் கேட்டு கிடைக்காததால் விரக்தியில் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.மின்சாரம் தாக்கி பலிமதுரை: புதுார் சங்கர்நகர் தமிழ்ச்செல்வன் மகன் முரளிதரன் 22. வீட்டின் முன் டியூப் லைட்டை அகற்றும்போது மின்சாரம் தாக்கி இறந்தார். டூவீலர் மோதி விவசாயி பலிமேலுார் : அட்டப்பட்டி விவசாயி செல்வராஜ் 60, கீழையூர் ரோட்டில் ஆடு மேய்த்த போது பின்னால் சென்ற டூவீலர் மோதி இறந்தார். கீழவளவு போலீசார் விசாரிக்கின்றனர்.
கிணற்றில் குதித்து சிறுமி தற்கொலைஅலங்காநல்லுார் : கரட்டு தெரு நாகராஜ், சத்யா தம்பதியர் மகள் அன்னபிரியா 17,திண்டுக்கல் பள்ளபட்டி அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படித்தார். இவர் அலைபேசியில் பேசுவதை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. ஒத்தவீடு அருகே விவசாய கிணற்றில் இருந்து சிறுமி சடலமாக மீட்கப்பட்டார். போலீசார் விசாரிக்கின்றனர்.மாட்டுத்தாவணியில் கொலைமதுரை: மாட்டுத்தாவணி நெல் மண்டி பகுதி அருகே புதருக்குள் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் நிர்வாண நிலையில் காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
அண்ணாநகர் போலீசார் விசாரணையில் அவர் சிவகங்கை மாவட்டம் திருப்பத்துார், அருகே முத்துச்சாமிபட்டியைச் சேர்ந்த மதியழகனாக இருக்கலாம் என தெரியவந்தது. நிர்வாண நிலையில் இறந்து கிடந்ததால் விபச்சார பெண்களுக்கு தொடர்பு உண்டா என விசாரணை நடக்கிறது. தீக்குளித்த பெண் இறப்பு எழுமலை : இந்திராநகர் சடையம்மாள் 55. இவரது கணவர் ரகுபதி சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். கூலி வேலை பார்த்து வந்த சடையம்மாள் சமீபத்தில் காதுவலியால் அறுவை சிகிச்சை செய்தார். வலி நிற்காததால் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றார். பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பலியானார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE