கோவை : எட்டு மாதங்கள் கழித்து கல்லுாரிக்கு திரும்பியுள்ள மாணவர்களுக்கு, கபசுர குடிநீர் வழங்கப்படுகிறது.
கொரோனா காரணமாக, எட்டு மாதங்களாக மூடியிருந்த கல்லுாரிகள் திறக்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக ஆராய்ச்சி மாணவர்கள், இளங்கலை மற்றும் முதுகலை இறுதியாண்டு மாணவர்கள் கல்லுாரிக்கு வருகின்றனர். கல்லுாரி நுழைவாயில்களில் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களின், உடல்வெப்ப நிலை 'தெர்மோ ஸ்கேனர்' மூலம், சோதனை செய்யப்படுகிறது.
அதேபோன்று தினமும் வகுப்பறைகள், ஆய்வகங்கள், விடுதிகள், கழிவறைகள் கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யப்படுகிறது.கல்லுாரிகளில் கேன்டீன் திறக்க அனுமதி வழங்கவில்லை. மாணவர்கள், அவர்களின் வீடுகளில் இருந்தே, உணவு மற்றும் தண்ணீர் எடுத்து வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.குறிப்பிட்ட நாள் இடைவெளியில், மாணவர்களின் எதிர்ப்பு சக்திக்காக, கபசுர குடிநீர் வழங்கப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE