கோவை : கோவை வனக்கோட்டத்தில் இந்தாண்டு கணக்கெடுப்பில் மொத்தம், 666 உயிரினங்கள் பதிவு செய்யப்பட்டன. சிறுவாணி பூச்சி உட்பட, புதிதாக இரு பூச்சியினங்கள் கண்டறியப்பட்டன.
கோவை வனத்துறை மற்றும் ஆக்ட் பார் பட்டர்பிளைஸ் அமைப்பு சார்பில், மூன்றாவது ஆண்டு பறவைகள், பட்டாம்பூச்சிகள், தட்டான்பூச்சிகள் மற்றும் அந்துப்பூச்சிகள் கணக்கெடுப்பு இரண்டு நாட்கள் நடந்தது.இதனை, கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் தொடங்கி வைத்தார். இதில், மோலுார், ஜூ அவுட்ரீச் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சஞ்சய், பறவை நிபுணர்கள், வல்லுனர்கள், வனத்துறை அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்கள் என, 50 பேர் கணக்கெடுப்பில் ஈடுபட்டனர்.
7 வனச்சரகங்களில், 8 முகாம்களுடன் கணக்கெடுப்பு தொடங்கப்பட்டது. அதன்படி, கோவை குற்றாலம், சிறுமுகை, மதுக்கரை, பெ.நா.பாளையம், காரமடை, ஆனைகட்டி, மேட்டுப்பாளையம், குஞ்சப்பனை ஆகிய இடங்களில் நடந்த ஆய்வில், 175 வகையான பறவைகள், 125 வகை பட்டாம்பூச்சிகள், 21 வகை தட்டான் பூச்சி மற்றும் 345 வகையான அந்துப்பூச்சி இனங்கள் என மொத்தம் 666 வகை உயிரினங்கள் கண்டறியப்பட்டன.
குறிப்பாக, பறவைகளில், ஜங்கிள் ஆவ்லெட், இருவாச்சி பறவை மூன்று வனச்சரகத்தில் காணப்பட்டது. பட்டாம்பூச்சிகளில்,ஆரஞ்சு வால் ஆவ்ல், டிராகன்பிளைஸ், நீலகிரி டோரண்ட் டார்ட், எம்பெரர் அந்து பூச்சிகள் கண்டறியப்பட்டன.சிறுவாணி பூச்சிகோவை குற்றாலம் பகுதியில், இரண்டு புதிய வகை பூச்சிகளை கண்டறிந்தனர். அவற்றில், ஒன்றுக்கு சிறுவாணி என பெயரிடப்பட்டது. அதிக எண்ணிக்கையில், 96 பறவைகள் மற்றும் 70 வகை பட்டாம்பூச்சி இனங்கள் காரமடை பகுதியிலும், 249 வகை அந்துப்பூச்சிகள் மேட்டுப்பாளையம் வனச்சரகத்திலும், பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE