பொது செய்தி

தமிழ்நாடு

1,000 வீடுகளை சுற்றிலும் ஊற்றெடுக்கும் தண்ணீர்; வேளாண் நிலத்தில் கட்டடம் கட்டியதன் விளைவு

Added : டிச 10, 2020
Share
Advertisement
கோவை : குனியமுத்துார் செங்குளத்தை சுற்றிலும் உள்ள, லே-அவுட்டுகளில், தண்ணீர் ஊற்றெடுக்கும் பிரச்னை, கடந்த, 10 நாட்களாக தொடர்கிறது; 1,000 வீடுகளை சுற்றி நீர் தேங்கியிருப்பதால், அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர்.கோவையில், சங்கிலி தொடர் போல், குளங்கள் அமைந்திருக்கின்றன. ஒரு குளத்தில் இருந்து இன்னொரு குளத்துக்கு நீர் கொண்டு செல்ல வழித்தடம், விவசாயத்துக்கு தண்ணீர் திருப்பிட
 1,000 வீடுகளை சுற்றிலும் ஊற்றெடுக்கும் தண்ணீர்; வேளாண் நிலத்தில் கட்டடம் கட்டியதன் விளைவு

கோவை : குனியமுத்துார் செங்குளத்தை சுற்றிலும் உள்ள, லே-அவுட்டுகளில், தண்ணீர் ஊற்றெடுக்கும் பிரச்னை, கடந்த, 10 நாட்களாக தொடர்கிறது; 1,000 வீடுகளை சுற்றி நீர் தேங்கியிருப்பதால், அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர்.

கோவையில், சங்கிலி தொடர் போல், குளங்கள் அமைந்திருக்கின்றன. ஒரு குளத்தில் இருந்து இன்னொரு குளத்துக்கு நீர் கொண்டு செல்ல வழித்தடம், விவசாயத்துக்கு தண்ணீர் திருப்பிட பாசன வாய்க்கால் அமைந்திருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக, பருவ மழை தவறாமல் பெய்து வருவதால், நீர்நிலைகள் நிரம்பியுள்ளன.

குனியமுத்துார் செங்குளத்தில், கடந்த சில ஆண்டுகளாக நீர் தேங்கியிருப்பதால், நிலத்தடி நீர் மட்டம் அதிகரித்துள்ளது. கிணறு, போர்வெல்களில் தண்ணீர் பொங்குகிறது.குளத்துக்கு அருகாமையில் உள்ள ராஜராஜேஸ்வரி நகர், வசந்தம் நகர், வசந்தம் கார்டன், ஜெ.ஜெ., நகர், பிருந்தாவன் நகர், குறிஞ்சி நகர், பிருந்தாவன் சர்க்கிள், மாங்கய்யா கார்டன் உள்ளிட்ட பகுதிகளில், நீர் ஊற்றெடுக்கும் பிரச்னை, கடந்த, 10 நாட்களாக தொடர்கிறது. கிட்டத்தட்ட, 1,000 வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது.

மாநகராட்சியில் இருந்து மோட்டார் மூலம் தண்ணீரை உறிஞ்சி எடுத்தாலும், தண்ணீர் ஊற்றெடுப்பு நின்றபாடில்லை. இதுபோன்ற பிரச்னை, குறிச்சி குளம் மற்றும் வெள்ளலுார் குளத்துக்கு எதிரே உள்ள நிலங்களிலும் இருக்கிறது.அந்தக்காலத்தில், குளத்துக்கு அருகில் இருந்த நிலங்களில் விவசாயம் செய்யப்பட்டது; பாசன வாய்க்கால் மூலம் தண்ணீர் வழங்கப்பட்டது. நீர் நிலைகள் வறண்டிருந்த சமயத்தில், வேளாண் நிலங்களை வகை மாற்றம் செய்து, லே-அவுட்டுகளாக மாற்றி, 'சைட்' பிரித்து விற்றுள்ளனர்.

அச்சமயம், பாசன வாய்க்கால் மற்றும் வடிகால்களை மூடி, ரோடு போடப்பட்டுள்ளது. விவசாய நிலங்களில் வீடுகள் கட்டப்பட்டுள்ளதால், தண்ணீர் செல்ல வழியின்றி, சூழ்ந்து நிற்கின்றன.அங்கீகாரம் வழங்கக்கூடாதுஇதுபோன்ற அவலம் தொடராமல் இருக்க, இப்பகுதிகளில் கட்டடம் கட்டுவதற்கான அனுமதி, லே-அவுட் பிரிப்பதற்கு வரைபட அங்கீகாரம் வழங்கக்கூடாது.அதுபோன்ற தவறுகளை அரசு துறை அதிகாரிகள் செய்து விட்டு, குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்த பின், மாற்று ஏற்பாடு செய்ய, வழி தேடுகின்றனர்.

வகை மாற்றம் செய்வதால், விவசாயமும் அழிவதால், அதுபோன்ற தவறுகளை இனியும் தொடராமல், நீர் நிலைகளை சுற்றியுள்ள பகுதிகள் விவசாய நிலங்களாகவே தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இப்பிரச்னைக்கு தீர்வு காண, பாசன வாய்க்காலை மீட்டெடுக்க வேண்டும்; வடிகால் அமைக்க வேண்டும். விவசாய நிலங்களை வகை மாற்றம் செய்து, மனைகளாக மாற்றுவதை தவிர்க்க வேண்டும்.

ஒரு குளத்தில் இருந்து, அடுத்த குளத்துக்குச் செல்லும் நீர் வழித்தடத்தை மீட்க வேண்டும். கிராம வரைபடத்தை கொண்டு, புவியியல் சார்ந்து, நீர் வடிகால் ஏற்படுத்த வேண்டும்.குளத்துக்கு அருகாமையில் உள்ள ராஜராஜேஸ்வரி நகர், வசந்தம் நகர், வசந்தம் கார்டன், ஜெ.ஜெ., நகர், பிருந்தாவன் நகர், குறிஞ்சி நகர், பிருந்தாவன் சர்க்கிள், மாங்கய்யா கார்டன் உள்ளிட்ட பகுதிகளில், நீர் ஊற்றெடுக்கும் பிரச்னை, கடந்த, 10 நாட்களாக தொடர்கிறது. கிட்டத்தட்ட, 1,000 வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது.

'வாய்க்காலை மீட்டெடுக்கலாம்'செங்குளத்தை சுற்றியுள்ள குடியிருப்புகளில், நீர் ஊற்றெடுக்கும் பிரச்னை குறித்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:செங்குளத்தில், 20 அடி உயரத்துக்கு நீர் தேங்கியிருக்கிறது. அதனால், சுற்றுப்பகுதியில் உள்ள நிலங்களில் நீர் மட்டம் உயர்ந்திருக்கிறது; 5 அடிக்கு தோண்டினாலே, தண்ணீர் வருகிறது.

அந்தக்காலத்தில், பாசன வாய்க்காலில் தண்ணீர் எடுத்து விவசாயம் செய்த பகுதிகள் என்பதால், ஊற்றெடுப்பதை தடுக்க வேண்டும்.விவசாய நிலங்களை தொந்தரவு செய்ததாலும், குடியிருப்புகளாக மாற்றியதாலும் இப்பிரச்னை ஏற்பட்டுள்ளது. பாசன வாய்க்காலை அளவீடு செய்து, நீர் செல்ல வழியேற்படுத்தினால், இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X