மதுரை : மிகச் சிறிய கவனக்குறைவை சரி செய்தால் பெரும் விபத்துக்களை தடுத்து விலைமதிப்பற்ற மனித உயிர்களை பாதுகாக்க முடியும் என்பதை 'ரோடு சேப்டி' குறும்படம் மூலம் அழுத்தமாக பதிவு செய்துள்ளார், மதுரை தெற்கு வட்டார போக்குவரத்து மோட்டார் ஆய்வாளர் செந்தில்குமார்.கடமையை தாண்டி அவர் சிந்தித்த மணித்துளிகளுக்கு கிடைத்த அங்கீகாரம் தான் ஒன்றரை மணிநேரம் ஓடும் இந்த குறும்படம். அவரது சொந்த செலவிலும் மூன்று மாதங்கள் உழைப்பிலும் இக்குறும்படம் தயாரிக்கப்பட்டது.
பல மாவட்டங்களில் சி.சி.டி.வி., கேமராக்களில் சிக்கிய 'லைவ்' விபத்துக் காட்சிகள், போக்குவரத்து போலீசாரின் கடின பணிகள், கவனக்குறைவு தொடர்பான வீடியோ காட்சிகளையும் இணைத்துள்ளார்.செந்தில்குமார் கூறியதாவது: விபத்துக்களை ஆய்வு செய்தபோது 90 சதவீதம் மிகச் சிறிய கவனக்குறைவு தான் காரணமாகின்றன. அந்த சிறிய கவன குறைவுகள் விளக்கப்பட்டுள்ளது. லைவ் விபத்து காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளன.
போக்குவரத்து போலீசாரின் 25 வகை கை சிக்னல்களின் அர்த்தத்தை புரிய வைத்துள்ளோம். ஆந்திராவில் டிராபிக் போலீசாருக்கு பணியை பாராட்டி வானக ஓட்டிகள் ரோஜா பூக்கள், குளிர் பானம் கொடுப்பர். அந்த வீடியோ இடம் பெற்றுள்ளது.அரசு போக்குவரத்து டிரைவர்கள் முதல் எல்.எல்.ஆர்., லைசென்ஸ் பெற வருவோர் வரை இப்படத்தை பார்க்க வைத்து விதிகளை பின்பற்ற செய்கிறோம். ரோட்டில் ஒவ்வொருவரும் பாதுகாப்பாக செல்ல வேண்டும் என்ற சுயசிந்தனையை ஏற்படுத்தும் முயற்சியாக குறும்படம் தயாரிக்கப்பட்டுஉள்ளது என்றார்.இவரை பாராட்ட 96294 92996
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE