கோவை : பி.எட்., பட்டப்படிப்பில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, இன்றுடன் முடிவடைகிறது.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லுாரிகளில், நடப்பு கல்வியாண்டில் பி.எட்., பட்டப்படிப்பில் சேருவதற்கான விண்ணப்ப பதிவு, ஆன்லைன் மூலம் கடந்த, 4ம் தேதி துவங்கியது.எஸ்.சி., எஸ்.டி., விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப கட்டணமாக, 250 ரூபாய் செலுத்த வேண்டும். மற்ற பிரிவு மாணவர்கள் விண்ணப்ப கட்டணம், 500 ரூபாய் செலுத்த வேண்டும்
மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது, தங்களது விருப்ப வரிசைப்படி கல்லுாரிகளை தேர்வு செய்யலாம். சான்றிதழ்களை, www.tngasaedu.in என்ற இணைய முகவரியில் பதிவேற்ற வேண்டும்.இணையதளத்தில் பதிவு செய்வதில் ஏதேனும் சிரமம் ஏற்பட்டால், 044-22351014, 22351015, 28278791 ஆகிய எண்களில் காலை, 10:00 முதல் மாலை, 6:00 மணி வரை தொடர்பு கொண்டு, கூடுதல் விபரங்களை பெறலாம்.
விண்ணப்பிக்க, இன்றே கடைசி நாள்.இனி நடத்தப்படும் ஆசிரியர் தகுதி தேர்வுகளில், வெற்றி பெறுவோருக்கு வழங்கப்படும் தகுதி சான்றிதழ்கள், வாழ்நாள் முழுவதும் செல்லும் என, தேசிய ஆசிரியர் கல்வி குழுமம் தெரிவித்துள்ளதால், ஆசிரியர் படிப்புக்கு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை, அதிகரிக்கும் என கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE