ஐ.ஐ.டி.,யில் மாணவரை சேர்க்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Added : டிச 10, 2020
Share
Advertisement
புதுடில்லி:பொறியியல் படிப்பில் சேர்வதற்கான 'ஆன்லைன்' விண்ணப்பத்தில் தவறுதலாக ஒரு இணைப்பை 'கிளிக்' செய்ததால் அனுமதி மறுக்கப்பட்ட மாணவரை சேர்க்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஆக்ராவைச் சேர்ந்த சித்தாந்த் பத்ரா 18 இந்தாண்டு 'ஜே.இ.இ.' தேர்வில் 270 மதிப்பெண்கள் பெற்று ஐ.ஐ.டி.யில் சேர தகுதி பெற்றுள்ளார். இதையடுத்து மும்பை ஐ.ஐ.டி.யில் நான்கு ஆண்டு பொறியியல்

புதுடில்லி:பொறியியல் படிப்பில் சேர்வதற்கான 'ஆன்லைன்' விண்ணப்பத்தில் தவறுதலாக ஒரு இணைப்பை 'கிளிக்' செய்ததால் அனுமதி மறுக்கப்பட்ட மாணவரை சேர்க்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆக்ராவைச் சேர்ந்த சித்தாந்த் பத்ரா 18 இந்தாண்டு 'ஜே.இ.இ.' தேர்வில் 270 மதிப்பெண்கள் பெற்று ஐ.ஐ.டி.யில் சேர தகுதி பெற்றுள்ளார். இதையடுத்து மும்பை ஐ.ஐ.டி.யில் நான்கு ஆண்டு பொறியியல் படிப்பிற்காக வலைதளத்தில் விண்ணப்பித்துள்ளார். அப்போது சேர்க்கையை உறுதி செய்யும் பக்கம் என தவறாக கருதி விண்ணப்பத்தை திரும்ப பெறுவதற்கான இணைப்பை 'கிளிக்' செய்துள்ளார்.

சில நாட்கள் கழித்து ஐ.ஐ.டி. வெளியிட்ட மாணவர் சேர்க்கை பட்டியலில் அவரது பெயர் இல்லாததை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். விண்ணப்பத்தை திரும்பப் பெறுவதாக வலை தளத்தில் குறிப்பிட்டுள்ளதால் அவர் செலுத்திய தொகை திரும்ப அளிக்கப்படும் என்ற தகவல் மாத்திரமே இருந்தது. இதையடுத்து தன் தவறை எடுத்துக் கூறி தன்னை சேர்க்குமாறு ஐ.ஐ.டி.யிடம் கோரினார். அதற்கு அவருக்கான இடம் வேறு ஒரு மாணவருக்கு ஒதுக்கப் பட்டதாக ஐ.ஐ.டி. தெரிவித்தது.

இதையடுத்து தனக்கு 'சீட்' ஒதுக்க மும்பை ஐ.ஐ.டி.க்கு உத்தரவிடக் கோரி சித்தாந்த் பத்ரா மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அது தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இம்மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் தீர்ப்பு தரும் வரை சித்தாந்த் பத்ராவுக்கு தற்காலிக அடிப்படையில் 'சீட்' ஒதுக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X