பொது செய்தி

இந்தியா

பெங்களூரு சிறையில் சசிகலா கன்னடத்தில் 3ம் வகுப்பு தேர்ச்சி

Updated : டிச 10, 2020 | Added : டிச 10, 2020 | கருத்துகள் (58)
Share
Advertisement
பெங்களூரு : சட்ட விரோதமாக சொத்து குவித்தது தொடர்பாக, பெங்களூரு, பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில், தண்டனை அனுபவிக்கும், தமிழக முன்னாள் முதல்வர் ஜெ.,யின் தோழி சசிகலா, 69, கன்னட மொழியை நன்கு கற்று, மூன்றாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளார்.சட்ட விரோதமாக, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த குற்றத்திற்காக, நான்கு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள சசிகலா, சிறைக்கு வந்த
பெங்களூரு சிறையில் சசிகலா  கன்னடத்தில் 3ம் வகுப்பு தேர்ச்சி

பெங்களூரு : சட்ட விரோதமாக சொத்து குவித்தது தொடர்பாக, பெங்களூரு, பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில், தண்டனை அனுபவிக்கும், தமிழக முன்னாள் முதல்வர் ஜெ.,யின் தோழி சசிகலா, 69, கன்னட மொழியை நன்கு கற்று, மூன்றாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளார்.

சட்ட விரோதமாக, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த குற்றத்திற்காக, நான்கு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள சசிகலா, சிறைக்கு வந்த புதிதில், மன வருத்தத்துடன், யாருடனும் பேசாமல் ஒதுங்கியிருந்தார். நாளடைவில் இயல்பு நிலைக்கு திரும்பினார். சிறை ஊழியர்கள், சக கைதிகளுடன் சகஜமாக பழகினார்.


latest tamil news


கல்வி கற்காத கைதிகளுக்கு, கல்வி கற்பிக்க ஆசிரியர்கள், சிறைக்கு வருவர். அவர்களிடம் கன்னடம் எழுதுவது, படிப்பதை கற்ற சசிகலா, இதன் மூலம் கன்னட மொழித் தேர்வில், மூன்றாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளார். இவர், சிறை அறை ஒன்றில், சிறிய தொட்டிகளில் காளான் வளர்த்துள்ளார். தோட்டத்தில் தர்ப்பூசணி வளர்த்து, பணமும் சம்பாதித்துள்ளார்.இதே சிறையில் உள்ள, இவரது உறவினர் இளவரசியும் கூட, கன்னடம் நன்றாக கற்றுள்ளார்.


Advertisement




வாசகர் கருத்து (58)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijay D Ratnam - Chennai,இந்தியா
10-டிச-202023:14:27 IST Report Abuse
Vijay D Ratnam வாவ் சின்னம்மா தேர்ட் இயர் முடிச்சிட்டாய்ங்க. சூப்பர். அடுத்து அப்டிக்கா ஒக்லஹாமா யுனிவர்சிட்டில போயி பயோடெக்னாலஜில பி.ஹெச்.டி பண்ணுவாங்க போல.
Rate this:
Cancel
Nallavan Nallavan - நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும் ,இந்தியா
10-டிச-202021:17:45 IST Report Abuse
Nallavan Nallavan பெங்களூருல ஒரு உடன்பிறவா சகோதரி கூடவா கிடைக்கலே ????
Rate this:
Cancel
Anand - madurai,இந்தியா
10-டிச-202018:15:57 IST Report Abuse
Anand மூணாம் கிளாஸ் பாஸ் பண்ணீட்டாங்களா அது போதும் பல் கலை கழகம் துணை வேந்தர் பதவிக்கு தகுதி வந்து விட்டது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X